சுவிட்சர்லாந்தில் 8,000 பேர் வீடுகளை இழக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்

ஃபெடரல் ஹவுசிங் ஆஃபீஸின் (OFL) சமீபத்திய அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் 2,200 வீடற்ற குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் மேலும் 8,000 பேர் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் ஆசிரியர்கள், 22 மாநிலங்களில் உள்ள 616 நகராட்சிகளில் இருந்து தகவல்களைத் தொகுக்க சேகரித்தனர். இந்த 616 நகராட்சிகள் சுவிட்சர்லாந்தின் மொத்தத்தில் 28% ஆக்கிரமித்துள்ளன. அதிகப்படியான செலவு, கடன், போதைப்பொருள் மற்றும் இடம்பெயர்வோடு தொடர்புடைய சமூக காரணிகள் ஆகியவை வீடற்ற தன்மைக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆய்வில் மேற்கோள் … Read more

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நேருவை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் பிரதமர் பேச்சு

ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி பேசினார். இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஆகியோர் தங்கள் நாடுகளை சுதந்திரத்திற்கு இட்டுச் சென்ற “மகத்தான மற்றும் ஆற்றல் மிகுந்த தலைவர்கள்” என்றும் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்துவதற்கான முன்மாதிரியான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நிறுவியதற்காகவும் லீ சியென் … Read more

பாஜக ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள் -மன்மோகன் சிங் கடும் தாக்கு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.  குறிப்பாக வேளாண் சட்டங்கள் மீதான அரசின் கொள்கைகள், நாட்டில் மக்களின் கடனை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.  “இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி உள்ளது. பாஜக … Read more

ஹைப்ரிட் மாடல்: ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் பழைய நிறுவனங்கள்..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, குறிப்பாக நிறுவனங்களில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, ஹைப்ரிட் மாடல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்.. இப்படி நிறுவனங்கள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஐடி, டெக் அல்லது புதிதாக உருவாகிய நிறுவனத்தில் தான் அதிகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போ மற்ற நிறுவனங்கள்…? மாத சம்பளகாரர்களுக்கு … Read more

பிரித்தானிய பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானிய பள்ளிகள் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும், ஒருசார்புடைய கற்பித்தலைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. புதிய வழிகாட்டுதலின் கீழ், பிரித்தானிய பள்ளிகள் மாணவர்களுக்கு உணர்ச்சிகரமான பிரச்சினைகளை பக்கச்சார்பற்ற முறையில் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் போன்ற சிக்கலான தலைப்புகளை ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கல்விச் செயலாளர் நதீம் ஜஹாவியின் கூற்றுப்படி, எந்தவொரு பாடமும் வரம்பற்றதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து நாளை பிற்பகல் 12:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை- மத்திய அரசு

புதுடெல்லி: ரஷியா- உக்ரைன் இடையிலான மோதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.  ஆனால், உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களையோ அல்லது தூதரக அதிகாரிகளையோ மீட்கும் திட்டம் இல்லை எனவும், தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களின் … Read more

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகள் முதல் விற்பனை வரையில் அனைத்தும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகப்படியான சலுகையை அறிவித்தது. மேலும் பல மாநிலங்கள் பத்திர பதிவு கட்டணத்தில் அதிகப்படியான சலுகையை அறிவித்தது. இதோடு ரியல் எஸ்டேட் கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான கடன் அளிக்கப்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பு முதல் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. … Read more