மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் – சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மதுபோதை ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை … Read more

லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30 % வட்டியுடன் தர வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு   இடைக்கால தடை விதித்தும், ரூ.10 கோடியை டெபாசிட் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா … Read more

S.I.R : 'அனைத்துக்கட்சி கூட்டத்தில் கப்சிப்; இரட்டை வேடம் போடுகிறதா திமுக?' – குமுறும் கட்சிகள்!

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் இன்று நடத்திய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுகவின் பிரதிநிதி பெரிதாக எதையும் பேசாமல் கப்சிப்பென அமர்ந்திருந்த சம்பவம் ஏனைய கட்சியினரை குழப்பத்தியில் ஆழ்த்தியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் – சென்னை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் S.I.R குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை ரிப்பன் பில்டிங்கில் நடத்தியிருந்தார். … Read more

தூத்துக்குடியில் அடை மழை – சேலத்தில் சாரல் மழை… பொதுமக்கள் அவதி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.  பல மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு  மழை பெய்து வரும் நிலையில்,  சேலத்தில் தொடரும் சாரல் மழை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய … Read more

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி – விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது. கோயிலுக்குள் மழை நீர் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை … Read more

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம்… புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் என்ன உள்ளன?

2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் … Read more

`US விசா கிடைக்காத விரக்தி' – உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Visa ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு … Read more

ரூ. 5000 கோடி செலுத்த முன்வந்ததால் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் நிதின்–சேதன் சந்தேசரா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570 மில்லியன் (ரூ. 5085 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அல்பேனியா பாஸ்போர்ட் மூலம் 2017ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய சகோதரர்களான நிதின்–சேதன் சந்தேசரா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து … Read more

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' – கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் … Read more

96 % SIR படிவங்கள் விநியோகம் – 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன! அர்ச்சனா பட்நாயக்

சென்னை:  தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே அதிக அளவில் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில்,  இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன  என தெரிவித்துள்ள  தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள்  தொடர்பாக  இந்திய … Read more