பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும், நேற்று (ஜூலை 28) நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களிடம் மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளின் செயலை நான் … Read more

நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

புதுடெல்லி: இந்தியாவின் நிக்கோபர் தீவுகள் பகுதியில் இன்று (ஜூலை 29) அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், சபாங்கிலிருந்து மேற்கு-வடமேற்கே 259 கிலோமீட்டர் தொலைவில், இன்று நள்ளிரவு 12: 12 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6.5 … Read more

இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்! என்ன என்ன தெரியுமா?

ஜூலை மாதம் முடியவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் நிதி தொடர்பான பல்வேறு மாற்றங்கள் வர உள்ளது. என்ன என்ன மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வீட்​டில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலான விவ​காரத்​தில் உயர் நீதி​மன்ற நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் உச்ச நீதி​மன்​றம் சரமாரி​யாகக் கேள்வி​களை எழுப்​பியது. டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்​பற்​றிய​போது. ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலாகி கிடப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து நீதிபதி வர்​மா​வின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்​தது. இதையடுத்து அவர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டார். மேலும், … Read more

இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு … Read more

பஹல்காமில் உள்ளூர் தீவிரவாதிகள் தாக்கி இருக்கலாம்: ப.சிதம்பரம் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு என்ஐஏ … Read more

ஸ்ரீநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் என்கவுன்ட்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷாவும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் உள்ள ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். காலை 11 மணியளவில் பாதுகாப்பு படையினர் – … Read more

அதிமுக எம்.பி.யாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு: மாநிலங்களவையில் கடவுளின் பெயரால் தமிழில் உறுதி ஏற்றனர்

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகிய இருவரும் ‘கடவுளின் பெயரால்’ என்று கூறி, தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. முன்னதாக இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் முழுமையாகப் படியெடுக்கப்பட்டு தனியே நூலாக வெளியிடப்படுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை விசிக எம்.பி. துரை.ரவிக்குமார் மக்களவையில் எழுப்பியிருந்தார். இவற்றுக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்கள்: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுப் பிரிவு, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகளைப் பிரதி … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா சுட்டுக்கொலை?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்லப்பட்ட சுலேமான் ஷா என்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இதற்காக ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ … Read more