கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சர்ச்சை கருத்து: சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் பாஜக-வுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அவரது சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கனா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. அதேபோன்று, குஜராத் காங்கிரஸ் நிர்வாகி எச்.எஸ்.அஹிர் எக்ஸ் பக்கத்தில் கங்கனா குறித்து ஒரு கமென்ட் வெளியானது. இதில் சுப்ரியா ஸ்ரீநேத்தின் பதிவை உடனடியாக … Read more

கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம்: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘சீக்கியருக்கான நீதி’ அமைப்பு தொடங்கப்பட்டது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதர வான இந்த அமைப்பு இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத நடவடிக் கைகளில் ஈடுபட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்த அமைப்பின் … Read more

வெப்ப அலையில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுரை

புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களை வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கத்தை … Read more

அசாமில் பாஜக, காங். வேட்பாளர் நேருக்கு நேர் சந்திப்பு

திஸ்பூர்: அசாம் மாநில மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். தேர்தலில் வெற்றி பெற பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அசாமில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அசாம்கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன. பாஜக 11, அசாம்கண பரிஷத் 2, ஐக்கிய மக்கள் கட்சி … Read more

கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி ஹோலி பண்டிகை கொண்டாடவில்லை: டெல்லி அமைச்சர் ஆதிஷி தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி ஹோலி பண்டிகை கொண்டாடவில்லை என்று டெல்லிகல்வித் துறை அமைச்சர் ஆதிஷி அறிவித்தார். மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பானவிசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல்8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதனை நிராகரித்து வந்தகேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதிஅமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் … Read more

வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் கேரள பாஜக தலைவர்!

கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஏற்கெனவே 12 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். கே.சுரேந்திரன், கடந்த 2020 … Read more

அயோத்தி ராமர் கோவிலில் பணியில் இருந்த ஜவானுக்கு AK 47 துப்பாக்கிக் காயம்! காரணம் என்ன?

Accident In Ayodhya Ram Temple Complex : அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவானுக்கு காயம் ஏற்பட்டது… 

வேட்பாளர் விலகல்கள் முதல் கைகூடாத கூட்டணிகள் வரை: பாஜக ‘இலக்கு 400’-க்கு ஆபத்தா?

அடுத்தடுத்து கூட்டணி முறிவு, பாஜக வேட்பாளர்கள் விலகல், சில மாநிலங்களில் தேர்தல் போட்டியில் இருந்து கட்சியே விலகல் என அடுத்தடுத்த ‘சம்பவங்கள்’ அரங்கேறும் சூழலில், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 400 தொகுதிகளை வெல்வது என்ற பாஜகவின் ‘இலக்கு’ சாத்தியமா? – இதோ சற்றே விரிவான பார்வை… விலகும் வேட்பாளர்கள்! – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தான் போட்டியிட போவதில்லை … Read more

சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பாஜக வேட்பாளருமான ரேகாவிடம் உரையாடிய பிரதமர் மோடி!

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பசிர்ஹத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ரேகா பத்ராவை, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது ரேகாவின் தேர்தல் பணிகள் குறித்து பிரதமர் விசாரித்தார். ரேகா பத்ராவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மக்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரேகாவை, ‘சக்தி ஸ்வரூபம்’ என்று அழைத்தார். பெங்காலியில் தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர், “நீங்கள் ஒரு பெரிய பொறுப்பை ஏற்கப் போகிறீர்கள் எவ்வாறு … Read more

“பிரதமர் பதவி – சோனியா, ராகுல் செய்த தியாகங்கள்…” – அடுக்கிய டி.கே.சிவகுமார்

புதுடெல்லி: ‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை தியாகம் செய்துள்ளனர்’ என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றுபடுத்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது, 2004-ம் ஆண்டு நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை சோனியா ஆட்சிக்கு கொண்டுவந்தார். அவர் (சோனியா காந்தி) காங்கிரஸ் அரசை மீண்டும் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருந்தார். … Read more