கங்கனா 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை – ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன் என மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தனது … Read more

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்… பலமடையும் இந்தியா கூட்டணி – பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஒடிசா பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை: நவீன் பட்நாயக் பின்னடைவு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரம், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கந்த்பன்ஜி தொகுதியில் 521 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 73 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 18 மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் பிஜேடி 50 சட்டப்பேரவை தொகுதியிலும், இரண்டு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், … Read more

AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..

AP Elections 2024 Result : ஆந்திர மாநிலத்தில், சட்டப்பேரவை தொகுதிகளின் தற்ப்போதைய நிலவரம்: பாஜக கூட்டணி கட்சிகள் தற்போது 113 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.   

ஆந்திர அரியணை யாருக்கு? – 9 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தின் அரியணை யாருக்கு? என்பது இன்று மதியத்திற்குள் தெரியவரும். ஆந்திர மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, … Read more

Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் பாஜகவுக்கு பிரச்னையா… முன்னிலை நிலவரம் சொல்வது என்ன?

Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரும் நிலையில், அது தாக்கம் செலுத்தியிருக்கிறதா என்பதை இதில் காணலாம்.

தேர்தல் முடிவுகள் 2024: பாஜக முன்னிலை; இண்டியா கூட்டணி சற்றே பின்னடைவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 272 இடங்களிலும், இண்டியா கூட்டணி 179 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. … Read more

Uttar Pradesh Lok Sabha Election Result 2024: மீண்டும் யோகியா இல்லை அகிலேஷ் அதிர்ச்சி கொடுப்பாரா?

Uttar Pradesh Election Result 2024: இந்தியாவின் மிக முக்கியமான, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் நிலவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். உத்தர பிரதேசம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாக இருந்துள்ளது.

வயநாட்டில் ராகுல் வாக்கு சதவீதம் சரியும்: கேரள கருத்து கணிப்பில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் விஎம்ஆர்-மனோரமா நியூஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் யுடிஎப் 16 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 2 இடங்களிலும் வெற்றி பெறும், எஞ்சிய 2 இடங்களில் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆலத்தூர், கண்ணூர் ஆகிய … Read more

சரியான நேரத்தில் கைது செய்யாததே மல்லையா, நீரவ் மோடி தப்பியோட காரணம்: மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து

மும்பை: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் மே 29-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை இயக்குநரகம் (இ.டி.) வியோமேஷ் ஷாவின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி போன்றோரின் … Read more