கேஜ்ரிவால் படத்துடன் ஆம் ஆத்மி பிரச்சாரம்

புதுடெல்லி: சமூக வலைதளப் பக்கங்களில் முகப்பு படத்தை (டிபி) மாற்றிவிட்டு ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஆதிஷி கூறியதாவது: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினரால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அர்விந்த் கேஜ்ரிவாலின் உத்வேக நிலை சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படத்தை மாற்றும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாட்டில் அரசியலமைப்பு … Read more

பிரதமர் மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன்: காங்கிரஸிலிருந்து விலகிய நவீன் ஜிண்டால் பேட்டி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கனவுகள், கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன் என்று காங்கிரஸிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தெரிவித்தார். பாஜக சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை வேட்பாளர் பட்டியலில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குருஷேத்ரா தொகுதியில், அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பாஜகவில் சேர்ந்தது குறித்து நவீன் ஜிண்டால் … Read more

மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 90% மாநிலங்களுக்கு வழங்கிவிட்டோம்: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு உயர் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்பு 2023-24 நிதியாண்டில் மூலதன செலவுக்காக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.1.30 லட்சம் கோடி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.1.06 லட்சம் கோடியாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குறைக்கப்பட்டது. சில மாநில அரசுகள் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யாததும் சில மாநிலங்கள் 2022-23 நிதியாண்டுக்கு வழங்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியை செலவிடாததுமே இதற்குக் காரணம். இந்நிலையில், … Read more

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தலில் போட்டியிடவில்லை: மருமகனை களமிறக்கினார்

பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா? என கேள்வி எழுந்த நிலையில், அவரது சொந்த தொகுதியில் தன் மருமகனை களமிறக்கியுள்ளார். காங்கிரஸ் தேசியத் தலைவரும், இண்டியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே (81) கடந்த 1972ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டுவரை நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டார். … Read more

மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகிறார் ஜனார்த்தன ரெட்டி 

பெங்களூரு: கர்நாடக சுரங்க தொழிலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஜி.ஜனார்த்தன ரெட்டி இன்று (திங்கள்கிழமை) மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகிறார். இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், “நான் பாஜக தலைவர்களைச் சந்தித்தேன். பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக அதே பதவியில் காண பாஜகவில் இணைவதாக அவர்களிடம் தெரிவித்தேன். நான் எனது 25 வது வயதிலிருந்து பாஜக தொண்டனாக இருந்திருக்கிறேன். அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டபோது நான் தீவிர பாஜக தொண்டனாக இருந்தேன்” என்று கூறினார். கர்நாடகாவில் சுமார் 20 … Read more

‘அனைத்து பெண்களும் கண்ணியத்திற்குரியவர்கள்’ – காங்கிரஸின் சுப்ரியா கருத்துக்கு கங்கனா பதிலடி

மண்டி: சமூக வலைதளத்தில் தன்னை மோசமாக விமர்சித்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் சுப்ரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், பாஜக மண்டி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத். அது குறித்து விரிவாக பார்ப்போம். “அன்புள்ள சுப்ரியா அவர்களுக்கு. கடந்த 20 ஆண்டு காலமாக ஒரு நடிகையாக பல்வேறு பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். அப்பாவி பெண்ணாக, கடவுளாக, பேயாக, தலைவியாக என அந்த பாத்திரங்கள் அமைந்துள்ளன. நம் மகள்கள் குறித்த தவறான கருத்துகளில் இருந்து நாம் அவர்களை விடுவிக்க … Read more

“நாட்டின் நலன் கருதி நான் மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறேன்” – ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும் கங்கவாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில், மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது கட்சியையும் அவர் பாஜகவில் இணைத்துள்ளார். ஜனார்த்தன ரெட்டியின் மனைவி … Read more

37 எம்.பி.க்களுக்கு ‘நோ’, கட்சித் தாவி வந்தோருக்கு ‘சீட்’ – பாஜக 5வது வேட்பாளர் பட்டியல் ஹைலைட்ஸ்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5-வது பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. 5-வது வேட்பாளர்கள் பட்டியலில் மொத்த 111 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் சிட்டிங் எம்.பி,க்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. இவர்களில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே, வி.கே.சிங், வருண் காந்தி ஆகியோரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் நடிகர்கள் கங்கனா ரணாவத், அருண் கோவில் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளனர். அனந்த்குமார் ஹெக்டேவுக்கு … Read more

சர்ச்சை கருத்துகள் டு பாஜக வேட்பாளர்… – யார் இந்த கங்கனா ரணாவத்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிரபல நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் களம் காண்கிறார். இது கங்கனாவின் சொந்த ஊர் என்பதால் எளிதாக ஜெயித்து விடலாம் என பாஜக கணித்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கங்கனா ரணாவத் இந்தத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? தற்போது அந்தத் தொகுதி யார் வசம் உள்ளது? – இதோ … Read more

சர்ச்சை பேச்சால் வாய்ப்பை இழந்தாரா அனந்தகுமார் ஹெக்டே? – பாஜக ‘சீட்’ தராததன் பின்னணி

பெங்களூரு: பாஜக சார்பில் ஆறு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகாவின் உத்தர கன்னடா தொகுதி உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை சீட் வழங்கப்படாததற்கு அவரது சர்ச்சைக்குரிய பேச்சே காரணம் என கூறப்படுகிறது. கர்நாடகாவின் உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, உத்தர கன்னடா தொகுதியின் வேட்பாளராக அம்மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே காகிரி நிறுத்தப்பட்டுள்ளார். அனந்தகுமார் ஹெக்டேவின் சர்ச்சைக்குரிய … Read more