“யாருக்கும் அஞ்சாதீர்கள்” – அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எதிர்கட்சி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். யாருக்கும் அஞ்சாதீர்கள். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் தலைவணங்க வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்படாதீர்கள். தகுதியின் அடிப்படையில் … Read more

ஜெயராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு: அமித் ஷா விவகாரத்தில் உடனே பதிலளிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: 150 மாவட்ட ஆட்சியர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தெரிவித்த கருத்து தொடர்பான தகவல்களை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று ஜெயராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த 1-ம் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பதவி பறிபோக உள்ள உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இதுவரை 150 பேரிடம் பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் … Read more

‘‘தொங்கு நாடாளுமன்றம் உருவானால்…” – குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி: தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் … Read more

டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து: பயணிகளுக்கு பாதிப்பு இல்லை

டெல்லி: துக்ளகாபாத் – ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று மாலை தீப்பிடித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, “தீ விபத்தில் … Read more

பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்…டாக்டர் சுபாஷ் சந்திரா பேச்சு!

Dr Subhash Chandra Talks About Press Freedom : டாக்டர் சுபாஷ் சந்திரா, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒன்றினைவோம் என பேசியிருக்கிறார்.

பெங்களூருவில் ஒரே நாளில் 111 மி.மீ மழை – 133 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவு!

பெங்களூரு: பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதாவது நேற்று அதிகபட்சமாக 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையின் அளவாகும். 1891-ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டு கால சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய … Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவின் நினைவு நாணயம்: திட்டமிட்டபடி இன்று வெளியாகாதது ஏன்?

புதுடெல்லி: கலைஞர் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகத்திடம் தமிழக அரசு மனு அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ல் துவங்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதை தொடர்ந்து இந்த நினைவு நாணயங்கள் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வெளியாகின்றன. இவற்றை, மத்திய … Read more

64.2 கோடி வாக்காளர்கள்.. சாதனை படைத்த தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராஜீவ் குமார் கூறினார். 

கருணாநிதியின் உருவப்படத்துக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அஞ்சலி @ புதுடெல்லி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஃபரூக் அப்துல்லா, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் … Read more

“2 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்பு” – மம்தா கருத்து

கொல்கத்தா: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அதனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். “ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே சிலரை கொண்டு தயாரித்தது தான் தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 மாநில சட்டப்பேரவை … Read more