37 எம்.பி.க்களுக்கு ‘நோ’, கட்சித் தாவி வந்தோருக்கு ‘சீட்’ – பாஜக 5வது வேட்பாளர் பட்டியல் ஹைலைட்ஸ்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5-வது பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. 5-வது வேட்பாளர்கள் பட்டியலில் மொத்த 111 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் சிட்டிங் எம்.பி,க்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. இவர்களில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே, வி.கே.சிங், வருண் காந்தி ஆகியோரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் நடிகர்கள் கங்கனா ரணாவத், அருண் கோவில் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளனர். அனந்த்குமார் ஹெக்டேவுக்கு … Read more