“இஸ்லாமியர் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தை சங்பரிவார் கைவிடுமா?” – பினராயி விஜயன்

மலப்புரம் (கேரளா): “ஓர் இஸ்லாமியர் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தையும், ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தையும் சங்பரிவார் கைவிடுமா?” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பினராயி விஜயன், “நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளனர். இங்கு … Read more

சிறையிலிருந்து ஆட்சி, அமைச்சர்களுக்கு உத்தரவு: மிகப்பெரிய பிரச்சாரத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி

Arvind Kejriwal: உங்களுக்கு அவரை தெரியாது. வெளியே இருக்கும் கெஜ்ரிவாலை விட சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் மிக ஆபத்தானவர்” என்று அவர் பாஜகவை எச்சரித்தார்: ஆம் ஆத்மி கட்சி

“நான் வெற்றி பெற்றால்…" – பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா அடுக்கிய வாக்குறுதிகள்

மாண்டி: பிரமதர் மோடியின் பணிகள் எங்களை வெற்றி பெறவைக்கும் என்று இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். பாஜகவின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி வேட்பாளராக கங்கனா ரணாவத் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, மாண்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினரோடு ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய கங்கனா ரணாவத், பின்னர் பாஜகவினரோடு தேர்தல் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத், “பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது … Read more

உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து: 13 பூசாரிகள் காயம்

உஜ்ஜைன்: உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் கருவறையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர். உஜ்ஜைன் ஆட்சியர் நீரஜ் குமார் சிங் இந்த தீ விபத்து சம்பவத்தை உறுதி செய்தார். மேலும் விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சியர் நீரஜ் குமார் சிங் பேசும்போது, “கோயிலில் பஸ்ம ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பூசாரிகள் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் … Read more

பகுஜன் சமாஜின் முதல்கட்ட பட்டியல்

உத்தர பிரதேசத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. 80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலேயே வென்றது. பாஜக 62 இடங்களில் வென்றது. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து களமிறங்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக அங்கு வாக்குப் பதிவு … Read more

பாலிவுட் நடிகை நேகா சர்மாவை களமிறக்க காங்கிரஸ் திட்டம்

பிஹார் மக்களவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரணியாகவும் போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளை காங்கிரஸ் கோருகிறது. ஆனால் 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கூறி வருகிறது. இரு கட்சிகளிடையே விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று … Read more

சிவராஜ்குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தல்

பெங்களூரு: மக்களவைத் தேர்தல் நிறைவடையும் வரை கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படங்கள் திரையிடுவதற்கு திரையரங்கம், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ராகுல் கவுட்டில்யா தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளார். அதில், ”கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிவராஜ்குமார் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். இதுமட்டுமல்லாமல் வேறு சில தொகுதிகளிலும் சிவராஜ்குமார் … Read more

மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 111 பேர் அடங்கிய 5-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் கொல்கத்தா … Read more

இலவச LPG சிலிண்டர்… ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு!

பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார். 

டெல்லியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறையில் இருந்து முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு: நீர் வளத் துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரி வால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கைதான பிறகும் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்லி நீர் வளத் துறை அமைச்சர் அதிஷி டெல்லியில் நேற்று கூறியதாவது: டெல்லி முதல்வர் … Read more