புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய புகாரில் சிறுவனின் தாய் கைது

மும்பை: புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரைத் தேடிவந்த நிலையில் மும்பையில் இருந்து நள்ளிரவு வீடு திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக ரத்தப் பரிசோதனைக்கு சிறுவனின் ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது ரத்த மாதிரியை ஷிவானி கொடுத்திருந்தது அம்பலமானது. இதன் பேரில் ஷிவானி மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அவர் கைது … Read more

தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்புகளில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சிஎன்என், ஏபிசி நியூஸ், நியூஸ் எக்ஸ், இண்டியா டிவி, ஜி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் … Read more

இறுதி கட்ட மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளில் 58.3% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: ஏழாவது மற்றும் இறுதிக் கட்டமாக 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 58.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு … Read more

2014, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் என்ன கூறின? – 2024ல் என்னவாகும்?

மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் முடிவடைந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நேற்று மாலை 6:30 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முன்னதாக முடிவு செய்ததால் பரபரப்பு … Read more

திஹார் சிறையில் இன்று சரணடைகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று திஹார் சிறையில் சரணடைகிறார். முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவிடம் மற்றும் அனுமன் கோயிலுக்குச் செல்ல உள்ளதாக அவர் கூறியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனில் மே 10 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜூன் 1ம் … Read more

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏற்காதது ஏன்? – 3 காரணம் சொல்லும் எதிர்க்கட்சிகள்

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக ’350’- க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன. காங்கிரஸின் ரியாக்‌ஷன் என்ன? – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ இந்தத் தேர்தல் கணிப்புகள் தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கிடையாது. பிரதமர் மோடியின் ஏஜென்சிகள் எடுத்த கற்பனை … Read more

“Exit polls போலி; ஜூன் 4ம் தேதி பாஜக வெற்றி பெறாது” – சரணடைவதற்கு முன்பு கேஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை, ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் கேஜ்ரிவால் திஹார் சிறையில் இன்று சரணடைந்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், … Read more

தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துவதற்கு காரணம் இருக்கிறது. இவை அனைத்தும், நான் திரும்பி வருகிறேன், நான் மீண்டும் பிரதமராகப் போகிறேன் எனக்கூறும் ஒரு வகையான உளவியல் … Read more

பேரவைத் தேர்தல் | சிக்கிம்மில் எஸ்கேஎம் இமாலய வெற்றி; அருணாச்சலில் பாஜகவுக்கு அருதிப்பெரும்பான்மை

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைக்கிறது. சிக்கிம்மில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி இமாலய வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரை பாஜக போட்டியின்றி … Read more

பேரவைத் தேர்தல் | அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி; சிக்கிம்மில் ஆட்சியை தக்கவைத்தது எஸ்கேஎம்

புதுடெல்லி: சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்: அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் … Read more