100-க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களில் கார்கே, ராகுல் பிரியங்கா பங்கேற்பு

மக்களவை தேர்தலுக்காகக் கடந்த இரண்டு மாதங்களில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் 100க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸுக்கு வாக்கு சேகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 100 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார், 20 பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் மற்றும் ஊடகங்களுக்கு 70 பேட்டிகள் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 107 பேரணிகள், பிரச்சார கூட்டங்கள், வாகன … Read more

இறுதிகட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி … Read more

ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்: வாக்களித்த பின்னர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

கோரக்பூர்: மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, … Read more

8 மாநிலங்களில் இறுதிகட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், 7 மாநிலங்கள், … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் விமான நிலையத்தில் பிரஜ்வல் கைது: ஜூன் 6 வரை போலீஸ் காவல்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். அங்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக் கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் … Read more

மும்பை ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு ஆயுள் சிறை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: மும்பை ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று வந்த இவர் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் சிறை சென்றார். சிறை தண்டனைக்குப் பின் இவர் படா ராஜன் தாதா கும்பலில் இணைந்தார். படா ராஜன் மறைவுக்குப் பின் அவரது … Read more

டெல்லி – அமெரிக்கா ஏர் இந்தியா விமானம் 24 மணி தாமதம்: பயணிகள் அவதி என புகார்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சுமார் 24 மணி நேரம் தாமதமானதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர். ஏசி இல்லாத சூழல், தரையில் காக்க வைக்கப்பட்ட நிலை, மயங்கிய நிலையில் பயணிகள் என அந்த பதிவுகளில் விமான நிறுவனத்தின் மீது பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த மோசமான அனுபவத்தையும் பகரிந்துள்ளனர். அந்த விமானம் ஆபரேஷனல் சிக்கல் காரணமாக … Read more

“சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – ரேவண்ணா விவகாரம்; கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது” என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

“இறை நம்பிக்கை இருந்தால் வீட்டில் தியானம் செய்யலாம்” – மோடியை விமர்சித்த கார்கே

புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இதனை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் … Read more

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி: ஓபன் ஏஐ குற்றச்சாட்டு

புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டாய்க் (STOIC) என்ற அரசியல் பிரச்சார மேலாண்மை நிறுவனம் ஒன்று … Read more