''டெல்லியின் குடிநீர் பிரச்சினையை தீருங்கள்'' – அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபடியே அமைச்சருக்கு கேஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபடியே, அமைச்சர் அடிஷிக்கு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 22ம் தேதி அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. எனினும், 6 நாட்கள் காவலில் எடுத்து … Read more

பாஜக 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இமாச்சலில் நடிகை கங்கனா போட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5வது பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில பாலிவுட் நடிகை கங்கனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை இதுவரை நான்கு பட்டியல்களாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 24) ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆந்திரா, பிஹார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 … Read more

3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணம் பூசிய 4 பேர் கைது @ உ.பி.

பிஜ்னூர்: உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூரில் ஹோலி கொண்டாடிய சில இளைஞர்கள் 3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணப்பொடிகளை பூசி, தண்ணீரை ஊற்றி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னூரில் நடந்துள்ளது. ஒரு ஆணும், 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் மருந்தகத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் குடும்பத்துக்கு அறிமுகமில்லாத நான்கு ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அவர்களை வழிமறித்து, அவர்களின் … Read more

''தேர்தல் பிரச்சாரத்தை சிபிஐ தடுக்கிறது'' – தேர்தல் ஆணையத்துக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்

கொல்கத்தா: சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதாகவும் குற்றம்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை )தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் … Read more

கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி – ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக ‘இண்டியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், “ஜனநாயகமும் நாடும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக இண்டியா கூட்டணி இந்த மெகா பேரணியை நடத்த இருக்கிறது. சர்வாதிகாரமாக … Read more

உலகிலேயே இந்தியாவில் மிக மலிவான விமான கட்டணங்கள்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை மற்றும் அது சார்ந்த வர்த்தகம் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் விமான போக்குவரத்து வர்த்தகம் மெல்ல, மெல்ல சீரடைந்து வளர்ச்சி பாதையை நோக்கி சென்று வருகிறது.

சிவ சேனா கூட்டணியை பிரகாஷ் அம்பேத்கர் கைவிட்டது துரதிருஷ்டவசமானது: சஞ்சய் ராவத்

மும்பை: சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கூட்டணியை பிரகாஷ் அம்பேத்கர் கைவிட்டது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். வன்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், சிவசேனாவுடன் இனி கூட்டணி இல்லை என்று சனிக்கிழமை கூறியதை அடுத்து சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ” உத்தவ் தாக்கரேவும் பிரகாஷ் அம்பேத்கரும் ஓராண்டுக்கு முன்பு கூட்டணியை அறிவித்த போது மக்களவைத் தேர்தல் பற்றிய பேச்சு இல்லை. … Read more

கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி போராட்டம் – டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தேசிய தலைநகரில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கேஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பாஜக தலைமை அலுவலகம், ஐடிஒ சாலை, அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் சாலைகளில் போலீஸார் ஏற்கனவே பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு அமைதியை பேணும் வகையில் துணை ராணுவமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. “ஆம் ஆத்மி … Read more

அரசியலில் மீண்டும் நடிகர் கோவிந்தா: ஷிண்டே கட்சி சார்பில் மக்களவைக்கு போட்டி

பாலிவுட் திரைப்படங்களில் பிரேக் டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா (61). கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் 165 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் காங்கிரஸில் இணைந்தவர், வடக்கு மும்பையில் போட்டியிட்டு வென்றார். இங்கு 5 முறை பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக்கை சுமார் 50,000 வாக்குகளில் தோல்வியுறச் செய்தார். நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வராமல் இருந்தவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பின. கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி … Read more

பாஜகவில் தேவகவுடா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: பிரஜ்வல் ரேவண்ணா தகவல்

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் மண்டியா, கோலார், ஹாசன், தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய 5 தொகுதிகளை மஜத கேட்டதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த பாஜக மேலிடம், 2 தொகுதிகளை தருவதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் … Read more