“என் உடல்நிலை குறித்து நண்பர் மோடிக்கு அக்கறை எனில்…” – நவீன் பட்நாயக் பதில்

புவனேஸ்வர்: “என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன் செய்து எனது உடல்நிலை குறித்து விசாரித்திருக்கலாம்” என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நவீன் பட்நாயக், “4.5 கோடி ஒடிசா மக்களும் எனது குடும்பத்தினரே. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக தான் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். சந்தோஷமான தருணங்களிலும், துக்கமான தருணங்களிலும் … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு முன்ஜாமின் கோரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் அருண் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, … Read more

நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு: பிரதமர் மோடி தகவல்

பாலாசோர்(ஒடிசா): ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலாசோரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “பாலாசோர் என்பது ஏவுகணை நகரம். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏவுகணை சக்தி மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாம் நமது பிரமோஸ் ஏவுகணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல், சந்திராயன் நிலவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. … Read more

பிரிஜ் பூஷண் சிங் மகனின் கார் மோதி இருவர் உயிரிழப்பு @ உ.பி

கைசரகஞ்ச்: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் கரண் பூஷண் சிங் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கரண் பூஷண் சிங் கான்வாய் சென்றபோது கார் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் இந்த கரண். கைசரகஞ்ச் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரிஜ் பூஷண். இந்த நிலையில்தான் மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. … Read more

‘‘கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ – மோடியின் பேச்சுக்கு மம்தா எதிர்வினை

கொல்கத்தா: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது. “ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. … Read more

கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு ஜுன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த சூழலில் அதனை நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி அதில் கோரியிருந்தார். … Read more

மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் முக்கிய சீக்கிய முகங்கள் இல்லை!

பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழாம் கட்டமாக ஜுன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கேப்டன் அம்ரீந்தர்சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிட்ட முக்கிய சீக்கிய முகங்கள் காணப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசியலில் முக்கிய சீக்கிய முகமாக கருதப்படுபவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (82). இவர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இரண்டு முறை முதல்வராக இருந்தார். கடந்த 2021 செப்டம்பரில் முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதால் காங்கிரஸை விட்டு விலகினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அதனை … Read more

“அமித் ஷா அரசியல் சாணக்கியர்” – உ.பி. முன்னாள் அமைச்சர் புகழாரம்

உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான நரட் ராய், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் வாராணசியில் சந்தித்துப் பேசி உள்ளார். பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நரட் ராய், அமித் ஷாவுடன் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் உள்ளார். இதுகுறித்து நரட் ராய் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இந்தியாவின் பெருமையை … Read more

ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை: மூத்த அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக சந்திரசேகரன் (50) பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய 6 பக்க கடிதத்தை ஷிமோகா பாஜக எம்எல்ஏ எஸ்.என்.சென்னபசப்பா பெங்களூருவில் நேற்று வெளியிட்டார். அதில், “கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் … Read more

புனே சொகுசு கார் விபத்து; சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: மருத்துவமனை கடைநிலை ஊழியர் கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவ னுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானதை தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அச்சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து … Read more