5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இவற்றில், … Read more

அமலாக்கத் துறையினர் கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன்னை உடனடியாக விடுவிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை … Read more

பேரவை தேர்தலில் 160 தொகுதியில் வெல்லும்: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், அக்கட்சியின் சட்டப்பேரவை, மக்களவை தொகுதி வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ரவுடிகள் அதிகரித்து விட்டனர். அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. கூட்டணியால் 31 பேருக்கு ‘சீட்’வழங்க முடியாமல் போனது. இவர்களின் தியாகம் மிகப்பெரியது. இவர்களுக்கு மாநில அல்லது மத்திய அரசு சார்பில் கண்டிப்பாக நன்மை நடக்கும். நமது கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். இதுவே … Read more

‘அப்ரூவர்’ ஆக சுகேஷ் சந்திரசேகர், சிக்கலில் கேஜ்ரிவால்… சுனிதாவுக்கு மாறுகிறதா ‘பவர்’?

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை அவரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி விவகாரம் இனி? – ஒரு விரைவுப் பார்வை. கேஜ்ரிவால் எதிராக சாட்சி! – பல்வேறு … Read more

''டெல்லியின் குடிநீர் பிரச்சினையை தீருங்கள்'' – அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபடியே அமைச்சருக்கு கேஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபடியே, அமைச்சர் அடிஷிக்கு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 22ம் தேதி அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. எனினும், 6 நாட்கள் காவலில் எடுத்து … Read more

பாஜக 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இமாச்சலில் நடிகை கங்கனா போட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5வது பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில பாலிவுட் நடிகை கங்கனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை இதுவரை நான்கு பட்டியல்களாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 24) ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆந்திரா, பிஹார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 … Read more

3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணம் பூசிய 4 பேர் கைது @ உ.பி.

பிஜ்னூர்: உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னூரில் ஹோலி கொண்டாடிய சில இளைஞர்கள் 3 முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணப்பொடிகளை பூசி, தண்ணீரை ஊற்றி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னூரில் நடந்துள்ளது. ஒரு ஆணும், 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் மருந்தகத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் குடும்பத்துக்கு அறிமுகமில்லாத நான்கு ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று அவர்களை வழிமறித்து, அவர்களின் … Read more

''தேர்தல் பிரச்சாரத்தை சிபிஐ தடுக்கிறது'' – தேர்தல் ஆணையத்துக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்

கொல்கத்தா: சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதாகவும் குற்றம்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை )தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் … Read more

கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி – ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக ‘இண்டியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், “ஜனநாயகமும் நாடும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக இண்டியா கூட்டணி இந்த மெகா பேரணியை நடத்த இருக்கிறது. சர்வாதிகாரமாக … Read more

உலகிலேயே இந்தியாவில் மிக மலிவான விமான கட்டணங்கள்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை மற்றும் அது சார்ந்த வர்த்தகம் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் விமான போக்குவரத்து வர்த்தகம் மெல்ல, மெல்ல சீரடைந்து வளர்ச்சி பாதையை நோக்கி சென்று வருகிறது.