கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி – ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக ‘இண்டியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், “ஜனநாயகமும் நாடும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக இண்டியா கூட்டணி இந்த மெகா பேரணியை நடத்த இருக்கிறது. சர்வாதிகாரமாக … Read more