‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இமாச்சல் பிரதேச வெள்ள பாதிப்பு தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில் வெட்டப்பட்ட … Read more

52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்! என்ன காரணம் தெரியுமா?

UP Man Murdered 52 Year Old Girlfriend : உத்திர பிரதேசத்தில் ஒருவர், தனது 52 வயது காதலியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பாபர்ப்போம்.

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழவைத்த நிகழ்வு: அன்புமணி கண்டனம்

சென்னை: திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டிவனம் நகராட்சியில் திமுக நகர்மன்ற உறுப்பினரின் சட்டவிரோத ஆணைகளுக்கு பணிய மறுத்ததற்காக அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்படி, பட்டியலினத்தைச் சேர்ந்த நகராட்சி இளநிலை உதவியாளர் … Read more

3 நாளாக விடாமல் அடிக்கும் மழை; குருகிராம் மிதக்கிறது… நொய்டா ரசிக்கிறது – ஏன் தெரியுமா?

Heavy Rain In Delhi: கடந்த 3 நாள்களாக டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் குருகிராம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது, நொய்டாவில் குறைவான பாதிப்பே இருக்கிறது. இரு நகரங்களில் ஏன் நொய்டா அதிகம் தப்பிக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் செப்​டம்​பர் 7 … Read more

டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி

புதுடெல்லி: பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர். அந்த நாடு​களில் மதரீ​தியி​லான துன்​புறுத்​தல்​களால் அவர்​கள் இப்​படி இந்​தி​யா​வுக்​குள் வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மேற்​கூறிய 6 மதச் சிறு​பான்​மை​யினர், அதி​காரப்​பூர்வ பாஸ்​போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வுக்​குள் வந்​திருந்​தால், அவர்​கள் தொடர்ந்து இங்கு தங்​கலாம். அவர்​களு​டைய பாஸ்​போர்ட், விசா போன்ற ஆவணங்​கள் காலா​வ​தி​யாகி இருந்​தா​லும், … Read more

​பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்

சண்​டிகர்: பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம் ஆத்மி எம்​எல்​ஏ​ ஹர்​மீத் பதன்​மஜ்​ரா மீது, ஒரு பெண் போலீ​ஸில் புகார் கொடுத்​திருந்​தார். அதில், ‘தனது மனை​வியை விவாகரத்து செய்​து ​விட்​ட​தாக பொய் சொல்லி எம்​எல்ஏ ஹர்​மீத் என்​னுடன் தொடர்பு வைத்​திருந்​தார். மேலும், என்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததோடு, மிரட்​டல், ஆபாச படங்​கள் போன்​றவற்றை அனுப்​பும் … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – எவற்றுக்கு எவ்வளவு?

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், … Read more

GST வரிகளில் அதிரடி மாற்றம்! ‘இந்த’ பொருட்களின் விலை குறைகிறது..

GST Slabs Reduced : ஜிஎஸ்டி கவுன்சில், தற்போது முக்கிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, புதிய விகிதங்கள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா

புதுடெல்லி: நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கரேகுட்டா மலைப்பகுதியில் ஆபரேஷன் ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப்பாதுகாப்புப் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அமித் ஷா, “கரேகுட்டா மலைப்பகுதியில், நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட … Read more