திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்… க்யூ செம ஸ்பீடு… தரிசனம் ரொம்ப ஈஸியாம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மே மாத தொடக்கம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. தினமும் சராசரியாக 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் மூலம் 3.5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் கிடைத்து வருகிறது. கடந்த வாரம் டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரத்திற்கு மேல் ஆனது. ​ஏழுமலையான் தரிசனம்இந்நிலையில் இந்த வாரம் 7 மணி நேரம் முதல் 10 மணி … Read more

CBSE 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் என்று வெளியாகும்? சிபிஎஸ்இ அளித்த தகவல்

CBSE Results 2023: சமீபத்தில் டிஜிலாக்கரில் இருந்து மதிப்பெண் பட்டியலை (மார்க் ஷீட்) பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை வரவேற்பு

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இருநாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜூன் 22ம் தேதி அதிபர் ஜோ பைடனும் அவர் மனைவியும் வெள்ளைமாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க உள்ளனர் என்று அதிபரின் ஊடகச் செயலாளர், கரீன் ஜீன் பியரி அறிவித்துள்ளார். இந்தோ பசிபிக் சுதந்திரமான வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம்  உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு … Read more

சர்கார் பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது.கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார். இதற்காக அவர் 14,000 கிலோமீட்டர் பயணம் செய்து ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். ஆனாலும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் … Read more

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது: ராஜஸ்தான் நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கருத்து

ராஜ்சமந்த்: ‘‘எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது’’ என ராஜஸ்தானில் நேற்று நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்பிலான சாலை, ரயில்வே உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நத்தட்வாரா பகுதிக்கு சென்றார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர். இந்தாண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி ராஜஸ்தான் சென்றார். நத்தட்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: வெளியாவது எப்போது? எவ்வாறு பார்ப்பது?

மாநில பாடத்திட்டத்தின் படி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் பரவியது. சிபிஎஸ்இ நிர்வாகம் அது தொடர்பான விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி … Read more

குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்திய டிராஃபிக் ஃபைன் போட்டோ!

கேரளாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற நபரை புகைப்படம் எடுத்த போக்குவரத்து சிக்னல் கேமரா அதை அவரது மனைவிக்கு அனுப்பியதால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு,போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இடுக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஹெல் மெட் அணியாமல் சாலையில் தன்னுடைய தோழி ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணம் செய்திருக்கிறார். விதிமுறைகளை மீறி இருவரும் பயணம் செய்தது தொடர்பான புகைப்படம் … Read more

கேரள படகு விபத்து : விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்தார். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே காரணம் என்பதும், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து … Read more

ஐயோ பாவம் ..! போக்குவரத்து விதிகளை மீறிய நபருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அந்த நபர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 25-ம் தேதி அந்த நபர் திருவனந்தபுரம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அந்த நபருடன் வேறொரு பெண்ணும் பயணித்துள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க ஏதுவாக அச்சாலையில் போக்குவரத்து துறை சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், … Read more

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்க உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு … Read more