எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது: பிரதமர் மோடி
ஜெய்ப்பூர்: அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த விழாவில் பிதமர் பேசியாதாவது: “நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு … Read more