இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் – கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வென்று முதல்வரான சித்தராமையா, இந்த திட்டத்தை ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் இந்த … Read more

கர்நாடகாவில் ஒரு பல்ப் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.1 லட்சம் வந்ததால் 90 வயது மூதாட்டி அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் மின்சார கட்டண பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை காட்டிலும் மே மாதத்தில் அதிகளவில் மின்சார கட்டணம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீர் … Read more

தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி…. 2024 தேர்தலுக்கு தயாராகும் எதிர் கட்சிகள்!

லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் நிர்ணயம் குறித்து, சிம்லா கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை நேற்று பிடிபட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7-வது மைல் அருகே ஒரு சிறுத்தை சீறி வந்து, கவுசிக் (3) எனும் சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த … Read more

தொடர் கனமழையால் கரைபுரளும் ஆறுகள் – அசாமில் 4.89 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹட் மற்றும் துப்ரி மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதுபோல மனாஸ், பக்லாதியா மற்றும் புதிமாரி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுகுறித்து அசாம் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அசாம் மாநிலத்தில் பஜாலி, பார்பெட்டா, பிஸ்வநாத், பொங்கைகான், … Read more

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திறமையாக தலையிட்டு ஆம் ஆத்மி – காங். மோதலை முடித்த மம்தாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள்நேற்று முன்தினம் பாட்னாவில் கூடினர். இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான தனது தனிப் பிரச்சினையை எழுப்பினார். இதில், காங்கிரஸின் முடிவை அறிவது அவரது நோக்கமாக இருந்தது. அவசர சட்ட விவகாரத்தில் … Read more

மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பெரும் விபத்து!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சோகத்தில் இருந்து இந்தியர்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதேசமயம் ரயில் தரம் புரண்டது, சரக்கு ரயில்கள் மோதி விபத்து போன்றவற்றில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே ரயில் விபத்து ஏற்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பங்குரா அருகே … Read more

ஹூஸ்டன் பல்கலை.,யில் இந்திய அரசு உதவியுடன் தமிழ் இருக்கை – அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உலகின் மூத்த மொழி தமிழ் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழுக்கான இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி முதலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். இதுவரை தனது இந்திய நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கூறிவந்த அவர், வெளிநாடுகளிலும் இதை பேசத் தொடங்கியுள்ளார். இந்தவகையில், … Read more

மணிப்பூரில் துப்பாக்கி சண்டையால் பதற்றம் நீடிப்பு – அனைத்து கட்சிகளுடன் அமித்  ஷா ஆலோசனை

புதுடெல்லி: மணிப்பூரில் 2 மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை தொடரும் சூழலில், பாதுகாப்புப் படையினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிது. இந்நிலையில், மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமுதாயத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரில் உள்ள … Read more

பகலில் குறைவு; இரவில் அதிகம் | மாறுபட்ட மின் கட்டணம்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பகலில் குறைவு; இரவில் அதிகம் என்ற அடிப்படையில், மாறுபட்ட மின் கட்டணத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மின் அமைச்சகம் கூறியிருப்பதாவது: நாட்டின் மின்சார விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை பகல் நேரத்தில் 20 சதவீதம் வரை குறைக்கவும், இரவு நேரத்தில் 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெவ்வேறு நேரங்களுக்கு மாறுபட்ட மின்சாரக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நுகர்வோர் தங்களது மின்சாரப் பயன்பாட்டை மாற்றியமைத்து, மின் கட்டணத்தை … Read more