உ.பி.யில் மீண்டும் என்கவுன்ட்டர்: கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்ட்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளது. கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அனில் துஜானா இன்று (மே 4) போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியாகியுள்ள முதல் கட்டத் தகவலின்படி, அனில் துஜானா கவுதம் புத் நகர், காசியாபாத், என்சிஆர் … Read more

டெல்லியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு.

டெல்லியில் மேற்கொண்டு வரும் போராட்டத்தை மேலும் தீவிப்படுத்தப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். தேசிய மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் புகார் கூறி டெல்லி ஜந்தர்மந்தரில் 10-வது நாளாக அப்போராட்டம் நீடிக்கிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர் – வீராங்கனைகளுக்கும் போலீசுக்கும் இடையே நேற்றிரவு மோதல் வெடித்தது. போலீசார் சிலர் குடிபோதையில் தங்களிடம் முறை தவறி நடந்து கொண்டதே மோதலுக்குக் காரணம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். இதைக் கண்டித்து, சர்வதேச அளவில் தான் வென்ற பதக்கங்களையும் மத்திய … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை!!

பீகார் அரசின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்றும், மக்கள் தொகைக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது. அதேபோன்று, தற்போது ஓபிசி பட்டியலில் உள்ள ஒரு சில சமுதாயத்தினர் மட்டுமே, மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு பயன்களை அனுபவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான … Read more

மணிப்பூர் வன்முறை | கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு

இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி … Read more

கண்டதும் சுட உத்தரவு.. மணிப்பூரில் கைமீறிப் போனது நிலைமை.. துப்பாக்கியை எடுக்கும் ராணுவம்!

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில அரசுபிறப்பித்துள்ளது. ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கியும் கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்ஸ்’ சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக் கோரி … Read more

கட்டுக்கடங்காத வன்முறை.. கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவு..!

மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காத சூழலில், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Meiteis சமூகத்திற்கு, பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பழங்குடியினத்தவர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்த நிலையில், சிஆர்பிசி 1973 -ன் படி கலவரக்காரர்களை கண்டவுடன் சுட அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதீத மோதலின் போது அனைத்து எச்சரிக்கைகளுக்கு பிறகு, வன்முறையாளர்களை கண்டவுடன் சுட … Read more

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்… வீடியோ பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!!

கேரளாவில் மசூதி ஒன்றில் நடைபெற்ற இந்து முறையிலான வீடியோவை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி – அஞ்சு அசோக் தம்பதிக்கு நடைபெற்ற திருமணம் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பெண்ணின் குடும்பத்தினர் ஏழை என்பதால் மசூதியை நாடினர். மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து மசூதியிலேயே திருமணம் நடத்த … Read more

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல; போராட்டம் தொடரும்” – மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவு அல்ல என்றும், தங்களின் போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: ‘முடிவுகளை வெளியிடக் கூடாது’.. பீகார் அரசுக்கு தடை..!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக சாதிய இழிவுகளால் அடிமைபடுத்தப்பட்டு, அடைப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தர்களுக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என நாடு முழுவது இருந்தும் பெரிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, … Read more

Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்

Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?