‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சை – தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசுக்கு உளவுத் துறை ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்டால், அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று அரசுக்கு தமிழக உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, … Read more

இந்தியா: ‘நாம 161வது இடமாம்.. பாகிஸ்தான் நமக்கு முன்னாடி போய்டுச்சு’.. எதுல.?

உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 161வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இன்று பத்திரிக்கை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை பார்க்கப்படுகிறது. … Read more

பயங்கரவாதிகளை காப்பாற்றுவது காங்கிரஸின் கொள்கை! பிரதமரின் தேர்தல் பிரச்சாரம்

Karnataka Election 2023: பயங்கரவாதத்தை பரப்ப சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, குற்றம் சாட்டுகிறார். இது கர்நாடக அரசியல் களம்…  

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி 100 முறை கத்தியால் குத்திக் கொலை!

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சுனில் தில்லு தாஜ்புரியாவை சக கைதிகள் நூறு முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். சிறை அலுவலர்கள் 15 , 20 நிமிடங்கள் கழித்துதான் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் உடலை மீட்டனர்.ஜித்தேந்தர் கோகி கோஷ்டியைச் சேர்ந்த  4 பேர் கொண்ட கும்பலால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கோகி  ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2014ம் ஆண்டு தாஜ்புரியாவின் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க இந்த படுகொலை … Read more

தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், “திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ … Read more

பெங்களூரு தெற்கு தொகுதி: தகறும் பாஜக கனவு கோட்டை? ’ரெட்டி’யை வச்சு JDS ஆடும் பவர்புல் கேம்!

கர்நாடக தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் களம் வெவ்வேறு மாதிரியாக காணப்படுகிறது. அந்த வகையில் பெங்களூரு தெற்கு தொகுதியின் கள நிலவரத்தை இங்கே பார்க்கலாம். இந்த தொகுதி கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவிலான வீட்டுவசதி திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதி இந்த … Read more

கர்நாடக தேர்தல்: மாமரத்தில் காய்த்த ரூ. 1 கோடி… காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் சிக்கியது!

Karnataka Assembly Election: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரரின் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

‘வீதியில் போராடுவது ஒழுக்கமின்மை’ – விமர்சனத்திற்கு பின்னர் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பி.டி.உஷா

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இன்று (புதன்கிழமை) சந்தித்தார். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் … Read more

CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்… எப்படி செக் செய்வது?

CBSE 10th, 12th Exam Result 2023: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை ஒரே நாளில் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளின் முறைகளின் அடிப்படையில் சில மணிநேர வித்தியாசத்துடன் இவை வெளியிடப்படக்கூடும்.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்..!!

வருகிற 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக நேற்று முன் தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சி … Read more