கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? | இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு: காங்கிரஸ் தகவல்

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருவதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் சித்தராமையாவை முதல்வராக்க விரும்புவதாகவும், டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பொறுப்பும், 6 துறைகளும் ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் … Read more

தாமதமாக தொடங்கும் தென்மேற்கு பருவமழை… எல்நினோவால் பாதிப்பா?

தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளுக்கு மழை கிடைக்கும். நாட்டின் 80 சதவீத மழை இந்த பருவமழை காலத்தில்தான் கிடைக்கும். கேரளா முதல் வட இந்தியாவின் பல மாநிலங்கள் நல்ல மழை பொழிவை பெறும். கோடை காலத்தை ஓட்டி தொடங்கும் மழை என்பதாலும் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்பதாலும் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகம். அந்தமான் பகுதிகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக கேரளா, கர்நாடகா, கோவா, மத்தியப்பிரதேசம் என பரவும். வழக்கமாக தென்மேற்கு … Read more

Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக

Karnataka Latest News Updates: கர்நாடக முதல்வர் பந்தயத்தில் முன்னிலையில் சித்தராமையா! டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் முயற்சி வெற்றி பெறுமா?

ரஷ்ய கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, இந்தியா ஏற்றுமதி செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா ஏற்றுமதி செய்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் டீசலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாக பிரசெல்ஸ் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போரல் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ரஷ்ய கச்சா எண்ணெய் வேறொரு நாட்டில் சுத்திகரிக்கப்படும்போது, அதிலிருந்து … Read more

அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின் வழங்கும் மிஷின்கள் நிறுவப்படும்..!

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு வலி ஒரு பக்கமும், எரிச்சல் மறு பக்கமும் சேர்ந்து பாடாய் படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கறை பட்டு விடுமோ என்கிற பயமும் பெண்களுக்கு இந்த சமயத்தில் ஏற்படுவது இயல்பு. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைக்கக்கூடாது, பூஜை அறைக்கு செல்லக்கூடாது, வீடுகளில் புழங்கக்கூடாது என ஏற்கனவே உடல் ரீதியில் நொந்துகிடக்கும் பெண்களை மனரீதியாகவும் நோகடிப்பதை பார்த்திருப்போம். அதேபோல, அவர்களுக்கு தேவையான … Read more

வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்..!!

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப் பாதை) சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. டாடா புராஜக்ட்ஸ் … Read more

“அரசியலை விட மக்கள் விருப்பம்தான் முக்கியம்” – கர்நாடக முதல்வர் பதவி இழுபறி குறித்து பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “அரசியலை விட மக்களின் விருப்பம் மிகவும் முக்கியமானது” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸில் நீடிக்கும் இழுபறி குறித்து அக்கட்சியை இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. இது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. அரசியலை விட மக்களின் விருப்பம் … Read more

காங்கிரஸ் கையில் 2 திட்டங்கள்… சித்தராமையா vs டிகே சிவக்குமார்… கர்நாடகாவின் அடுத்த சி.எம் இவர்தானாம்?

கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் போட்டா போட்டி நிலவி வருகிறது. இருவரையும் டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் நாற்காலியை விட்டு தர இருவருக்கும் மனமில்லை. முதலில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவரையும் தனித்தனியே அழைத்து பேசினார். ராகுல் காந்தி உடன் சந்திப்பு இதையடுத்து ராகுல் காந்தியை தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார். இதற்கிடையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்களின் ஆதரவு … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா தான்.. இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்!

New Chief Minister of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் எனவும், துணை முதல்வர் பதவி மற்றும் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எனவும் தகவல்கள்  வெளியாகியுள்ளது

இனி மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை : புதிய சட்ட திருத்தம் அமல்..!!

கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (வயது 22) . இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபரை வந்தனா தாஸ் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார். . கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட பிறகும் களமசேரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், … Read more