ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் கடத்தல் குழுக்களின் வலையமைப்பு தொடர்பாக மாநில காவல்துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தை பரப்ப, வெளிநாட்டு தீவிரவாத குழுக்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source link