சித்தராமையா Vs டி.கே.சிவகுமார் | தேர்தல் வெற்றிகளை விட முதல்வர்களை தேர்ந்தெடுப்பதே காங்கிரஸுக்கு கடினம்?

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது. இருவரும் ‘நீயா? நானா?’ போட்டியில் நிற்கின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் … Read more

திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; நேரத்தில் 15 நிமிட மாற்றம்… இன்னும் செம ஸ்பீடா!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெயரை கேட்டாலே என்னா ஸ்பீடு? ஃப்ளைட்ல போற மாதிரி இருக்காமே? எல்லாம் லேட்டஸ்ட் டெக்னால்ஜியாம். இப்படியான பேச்சை தான் கேட்க முடிகிறது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று பாஜகவினரால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையையும் பிரதமர் மோடியே நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தற்போது வரை 15 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வரும் … Read more

கர்நாடக முதல்வர் யார்? டெல்லியில் முகாமிட்டு இருக்கும் தலைவர்கள்! கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

Karnataka CM Decision: அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை. முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். 

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது – பிரதமர் மோடி!

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு கொள்கையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்வதேச நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகி வருவதாக கூறினார். வால்மார்ட், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவன சி.இ.ஓ.க்கள் இந்தியாவில் இருந்து … Read more

‘ஆட்சேர்ப்பு முறையில் ஏற்படுத்திய மாற்றத்தால் ஊழல் முடிவுக்கு வந்துள்ளது’ – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ‘ரோஜ்கார் மேளா’-வில் மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் கூறியதாவது, “முன்பெல்லாம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது கடினமானதாக இருந்தது. விண்ணப்பபடிவத்தைப் பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது அரசு … Read more

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்: முதலமைச்சர் பதவிக்காக முதுகுல குத்தமாட்டேன்… யாரையும் மிரட்ட மாட்டேன்..

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதனை தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து … Read more

“எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது…” – மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

பூனா: கர்நாடகாவைப் போல மகாராஷ்டிராவிலும் வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று அம்மாநில துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலில் தென்மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அம்மாநில துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியதாவது: “நாம் கர்நாடகாவில் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், நமது வாக்கு சதவீதம் குறையவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவீதம் … Read more

Bad Touch அப்டினா என்ன? உடைந்த சீக்ரெட்… சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்… எல்லாம் அந்த ட்ரெய்னிங் தான் காரணம்!

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு தங்களை பாதுகாத்து கொள்ள உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டிய பொறுப்பானது பெற்றோர், ஆசிரியர், சமூகம், அரசு எனப் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக Good Touch, Bad Touch எனச் சொல்லப்படும் சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு சொல்லி தர வேண்டும். ஏனெனில் இள வயதில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன. தவறான தொடுதல் எது பலருக்கு அதுபற்றி தெரிவதில்லை. சிலர் மிரட்டப்பட்டு அச்சத்தில் … Read more

டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் டிகே சிவக்குமார்? முதலமைச்சர் யார்?

Siddaramaiah Or DK Shivakumar?: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வது தொடர்பாக கட்சி மேலிடத்தை அவர் சந்திக்கிறார் முதல்வர் யார் ஆலோசனையில் ராகுல் காந்தி

முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது முழு நம்பிக்கை – டி.கே.சிவகுமார்!

முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற அவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரிலேயே பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். கட்சிக்கு துரோகம் செய்வதோ, மிரட்டுவதோ தனது பாணி அல்ல எனக்குறிப்பிட்ட அவர், மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். நூற்றுக்கும் அதிமான … Read more