போதையில் புத்திமாறுமா… 30 ஆண்டுக்கு முன் கொலை – இப்போது சிக்கிய கொலையாளி – உண்மை கசிந்தது எப்படி?

Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம். 

போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார்: குடியரசுத் தலைவர்

உயர்தொழில்நுட்ப போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார். ஐதராபாத் அருகே இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரணப் பணிகளையும் விமானப்படை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்றார். சாதகமற்ற சூழலில் பறப்பது, தரையிறங்குவது ஆகியவை விமானப்படையின் உயர்திறன்களுக்கு சான்றாக விளங்குவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். Source … Read more

குஜராத் | பிப்பர்ஜாய் புயல் பாதித்த பகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

காந்திநகர்: குஜராத்தில் பிப்பர்ஜாய் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் கடந்த வியாழன் இரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 … Read more

மணிப்பூர் வன்முறை | மாநிலத்தில் நடக்கும் இனக்கலவரத்தில் குறிவைக்கப்படும் அரசியல்வாதிகள் 

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று (ஜூன் 17) தெரிவித்தனர். இந்தக் கலவரங்களில் அரசியல்வாதிகளை வன்முறை கும்பல்கள் தொடர்ந்து குறிவைத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் … Read more

கொடுமை… ஆம்புலன்ஸ் இல்ல… பச்சிளம் குழந்தையின் உடலை பையில் வைத்து 150 கிமீ பஸ்ஸில் பயணம் செய்த பெற்றோர்!

மத்திய பிரதேச மாநிலம் திண்டாரி மாவட்டம் சஹாஜ்புரியில் வசிப்பர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜமானி. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஜமானிக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்ததுமே ரொம்பவே பலவீனமாகவும் உடல் நலக்குறைவுடனும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் குழந்தையை ஜபல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி ஜபல்பூர் மருத்துவக் … Read more

சிவன் சொத்து குல நாசம்! கேதாரீஸ்வரர் சும்மா விடமாட்டார்! வைரலாகும் வீடியோ

Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது: அஜித் தோவல்

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைப்பான அசோசெம் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபேஸ்-ன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அஜித் தோவல், அ”நாம் நமது வரலாற்றைப் பார்க்கும்போது, சிறந்த தரமான மக்கள், அதிக எண்ணிக்கையிலான படித்தவர்கள் என இந்தியா எல்லாவற்றையும் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு வலுவான பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு கட்டமைக்கப்படவில்லை, அதனால்தான் ஊடுருவல்காரர்கள் – … Read more

‘மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் முக்கியம்; ஆனால்..’ – நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து சஞ்சய் ரவுத் கருத்து

புதுடெல்லி: “மற்ற பிரதமர்களின் பங்களிப்பைக் காட்டவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரினை மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். டெல்லி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மத்திய அரசு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று மாற்றியுள்ளது. இதுகுறித்து சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா … Read more

பிரிஜ் பூஷண் மீதான குற்றப்பத்திரிகையில் போட்டோ, வீடியோ ஆதாரங்களை இணைத்த டெல்லி போலீஸ்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 6 பெண் புகார்தாரர்களில், 4 பேரின் புகார்களில் புகைப்பட, வீடியோ ஆதாரங்களை டெல்லி போலீஸ் இணைத்துள்ளது. இதில் 3 ஆதாரங்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவை. பிரிஜ் பூஷண் சிங் மீது இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் வியாழக்கிழமை (ஜூன் 15) சுமார் 1500 … Read more

காணாமல் போன 88 ஆயிரம் கோடி… எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் – யார் பொறுப்பு?

500 Rupees Note Missing: புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.