தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. … Read more