”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மிகும், கலவரம் நடக்கும்” – அமித் ஷா

பெங்களூரு: “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இலலாத அளவுக்கு அதிகரிக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் … Read more

ஹார்ட் அட்டாக் + கொரோனா.. அப்போ சந்தேகப்பட்டது சரிதானா.. மருத்துவ நிபுணரின் பகீர் எச்சரிக்கை..

சிம்லா: சமீபகாலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு கொரோனா பாதிப்புதான் காரணம் என்று பிரபல மருத்துவரும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகருமான நரேஷ் புரோகித் கூறியுள்ளார். மேலும், இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் அண்மைக்காலமாக மாரடைப்பால் உயிரிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இளம் வயதினர் திடீர் மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரிழக்கும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. இளம்வயதினர் என்றால் 30 வயதுக்கு … Read more

விமான நிலையத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை – அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில்

காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை தாலிபன் அரசு சுட்டுக் கொன்றதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கான் தலைநகரான காபூலில்  விமான நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில் 13 அமெரிக்கர்கள் உட்பட 183 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதில், தாலிபன் ராணுவமே நேரடியாக ஈடுபட்டது என்றும் அமெரிக்கா அதில் ஈடுபடவில்லை என்றும் … Read more

கூடங்குளம் அணுமின் நிலையம்: 5-வது அணு உலைக்கான பாகங்களை அனுப்பியது ரஷ்யா

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டு வரும் 5-வது அலகுக்கு தேவைப்படும் நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அனுப்பியுள்ளது. கூடங்குளம் அணு உலை நிர்வாகம், கட்டுமானத்தில் இந்த நிறுவனம்தான் முக்கிய பங்காற்றி வருகிறது. நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்து வருகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ஏற்றுமதி திறனை மேம்படுத்தி … Read more

சைக்கிளில் வந்த நபர்மீது மோதிய கார்.. வேகத்தைக் குறைக்காமல் 200 மீட்டர் இழுத்துச்சென்ற கொடூரம்..!

டெல்லியில் மீண்டும் காருடன் சேர்த்து ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரமான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சைக்கிளில் வந்த நபர்மீது மோதிய கார் ஒன்று வேகத்தைக் குறைக்காமல் அவரை சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச்சென்றது. விபத்தில் சிக்கிய அந்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் இருந்த மக்களிடமும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் Source link

கேதார்நாத் கோயில் நடை மீண்டும் திறப்பு..!!

பிரசித்தி பெற்ற சார்தாம் கோயிலில்களில் கேதார்நாத் ஆலயமும் ஒன்று. முன்னதாக அட்சய திருதியை அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆலயங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று கேதார்நாத் கோயிலின் நடை திறக்கப்பட்டது. கோயிலின் தலைமை பூசாரி ராவல் பீமா சங்கர் லிங் கேதார்நாத் கோயிலை திறந்து பாரம்பரிய சடங்குகளை செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கோயிலின் நடையை திறந்துவைத்து வழிபாடு மேற்கொண்டார். கோயில் திறக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மோசமான … Read more

'தெலங்கானா போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர்' – ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித்தலைவர் ஷர்மிளா போலீஸாரை தாக்கியதாக நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு, செஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று நாம்பல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்று மாலை ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சந்திரசேகர ராவ் 9 வருடங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மகளிருக்கு இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு 2 படுக்கை அறை வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்னவானது? இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி … Read more

டிஜிட்டல் ஈஸ்ட் இண்டியா கம்பெனி! கூகுளின் பில்லிங் கொள்கையை சாடும் அனுபம் மிட்டல்

Digital East India Company: இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை மீறி மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்த ஆப் டெவலப்பர்களிடமிருந்து 11-26 சதவிகிதம் வரை கமிஷன்களை கூகுள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் உச்சத்தில் இருக்கும்” – அமித் ஷா

கர்நாடகாவில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியல் உச்சத்தில் இருக்கும் என்றும், ஒட்டுமொத்த கர்நாடகாவும் கலவரங்களால் பாதிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகல்கோட் என்ற பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் சென்று விடும் என்று விமர்சித்தார். பாஜகவால் மட்டுமே புதிய கர்நாடகத்தை வழிநடத்த முடியுமென்று கூறிய அமித் ஷா, மாநிலத்தில் மீண்டும் இரட்டை எஞ்சின் ஆட்சியை … Read more

"இந்திய எரிபொருட்களின் விலை குறித்த புகார்கள் வெறும் கட்டுக்கதைகளே" – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: “இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் பலனாக, எரி பொருட்களின் விலை குறைவாக உள்ள உலக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பது என்பதுதான் எவரும் மறுக்க முடியாத உண்மை“ என்று மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்து தமிழ் இணையதளத்திற்கு அவர் பிரத்யேகமாக எழுதிய கட்டுரையின் … Read more