"ஏய்.. ஏய்.. என்ன பண்ற".. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் – தொடரும் அட்டூழியம்

டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இந்தியப் பயணி ஒருவர் தனது அருகே அமர்ந்திருந்த சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற 2 சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்த நிகழ்வு மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மக்களுக்கு விமானப் பயணமே வேண்டாம் என்ற மனநிலைதான் ஏற்படுகிறது. சிலரின் அநாகரீகமாக செயல்களே இதற்கு காரணம். ஓடும் விமானத்தில் புகைப்பிடிப்பது, எமர்ஜென்சி கதவை … Read more

ரிலையன்ஸில் நெடுங்காலம் பணியாற்றிய ஊழியருக்கு ரூ.1,500 கோடி பங்களாவை பரிசளித்தார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தில் நெடுங்காலம் பணியாற்றி அதன் வெற்றிக்கு வழி வகுத்தவர்களில் ஒருவரும், முகேஷ் அம்பானியின் வலதுகரமாக கருதப்படுபவருமான மனோஜ் மோடிக்கு, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். ஒரு சதுரடி 45 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் மும்பை மாநகரின் நெப்பியன் கடற்கரை சாலையில் அந்த 22 மாடி கட்டடம் அமைந்துள்ளது. விருந்தாவன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் … Read more

அடுத்த மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை!!

மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி தெரியவந்துள்ளது. மாதத்தின் தொடக்க நாளே விடுமுறைதான். தொழிலாளர் தினம் என்பதால் மே 1ஆம் தேதி நாடு முழுவதும் விடுமுறை. மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா என்பதால், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை. மே 7 – ஞாயிறு, மே … Read more

ஐஏஎஸ் அதிகாரி கொலை வழக்கில் விடுதலை ஆகிறார் முன்னாள் கேங்ஸ்டர் ஆனந்த் மோகன் – பிஹாரில் புதிய சர்ச்சை

பாட்னா: ஐஏஎஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகிறார். ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த அவர் இப்போது விடுவிக்கப்படுவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. யார் … Read more

பெங்களூரு மெட்ரோ: பையப்பனஹள்ளி டூ கே.ஆர்.புரம் சேவை எப்போது? வெளியான ஹேப்பி நியூஸ்!

தலைநகர் டெல்லிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ சேவையை கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இங்கு ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூர பர்பிள் லைன், 30.32 கிலோமீட்டர் தூர கிரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் பர்பிள் லைன் என்பது பெங்களூருவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு நம்ம மெட்ரோ கிரீன் லைன் என்பது வடக்கு மற்றும் … Read more

ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!

கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.

‘ரெயின்போ திருமணங்கள் கைகூடும்…’ – தலைமை நீதிபதிக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர் நம்பிக்கைக் கடிதம்

புதுடெல்லி: ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது. தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரெயின்போ திருமணங்கள் கைகூடும் … Read more

"ஒரு முஸ்லிம் ஓட்டு கூட தேவை இல்லை".. பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா பேச்சு.. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை!

பெங்களூர்: கர்நாடகாவில் ஏற்கனவே பாஜகவின் கிராஃப் அநியாயத்துக்கு இறங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் ஓட்டு கூட தேவை இல்லை என்று அவர் பேசி இருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக … Read more

மே மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!! வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. … Read more

அகவிலைப்படி மீண்டும் உயர வாய்ப்பு! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மார்ச் 24, 2023 அன்று அறிவித்தார். இந்த புதிய அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அளவு 42 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் … Read more