ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா : எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவிற்கு இடம் கொடுத்துவிட கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய … Read more

டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!!

டெல்லி: டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர். கொசு விரட்டியை எரித்ததில் வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

மும்பை – கோவா நெடுஞ்சாலை பணி டிசம்பரில் முடிவடையும்

தானே: மகாராஷ்டிர மாநிலத்தில் பலஸ்பே – இந்துப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வேறு சில வழித்தடங்களுக்கு பன்வேலில் நேற்று நடைபெற்ற ‘பூமி பூஜை’யில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது. மோர்பே – கரஞ்சடே சாலை ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது, ஜவஹர்லால் நேரு துறைமுகம் வழியாகச் செல்லும் மும்பை, டெல்லி இடையேயான தூரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்க … Read more

மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுச்சேரி: மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று  நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

“ரூ.30 கோடி சொத்து இருந்தும் உணவு அளிக்காத மகன்…” – வயதான தம்பதியரின் உருக்கமான தற்கொலைக் குறிப்பு

சண்டிகர்: 30 கோடி சொத்து வைத்துள்ள தங்கள் மகன், தங்களுக்கு உணவிடவில்லை என தற்கொலைக் கடிதத்தில் சொல்லி உயிரை மாய்த்துக் கொண்டனர் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதியர். அவர்கள் இருவரும் 70 வயதை கடந்தவர்கள். இருவரும் சுதந்திர இந்தியாவில் தங்கள் வாழ்வின் பெரும்பாலான நாட்கள் வழந்தவர்கள். பூச்சிக்களை அழிக்கவல்ல மாத்திரையை உட்கொண்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜெகதீஷ் சந்திர ஆர்யா (78) மற்றும் பாக்லி தேவி (77) என தம்பதியர் இருவரும் இந்த மாத்திரையை … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது லோக்ஆயுக்தா

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை லோக்ஆயுக்தா 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது. முதல்வர் நிவாரண நிதியை தவறாக கையாண்டதாக பினராயி விஜயனுக்கு எதிராக லோக்ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட்விஸ்பரர்ஸ்’ படக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதைவளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தியாவில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுதான் முதல் … Read more

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்..!!

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் 25,000 அபராதம் விதித்துள்ளது.

நாளை முதல் வருமான வரி விதியில் மாற்றம்!!

அண்மையில் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வருமான வரி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையில் … Read more

கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

கோவிலுக்குச் சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் … Read more