திரிபுரா சட்டப்பேரவையில் ஆபாசபடம் பார்த்த பாஜ எம்எல்ஏ; வீடியோ வைரல்.!

திரிபுரா பட்ஜெட் கூட்டத்தொடர் திரிபுரா மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாச படத்தை பார்த்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத், திரிபுரா மாநிலத்தில் உள்ள பாக்பாசா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆபாசபடம் பார்த்த பாஜக எம்எல்ஏ மாநில பட்ஜெட் தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் … Read more

ராமநவமியை முன்னிட்டு மேற்குவங்காளம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் சலசலப்பு..!

ராமநவமியை முன்னிட்டு மேற்குவங்காளம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சலசலப்பில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குஜராத்தின் வடோதரா பகுதியில் ராமநவமி ஷோபா யாத்திரையின் போது நிகழ்ந்த சலசலப்பின் போது இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக் … Read more

மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயில் படிக்கிணற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 12 பேர் பலி..!!

போபால்: மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் காரணமாக கோயில் கிணறு இடிந்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் பட்டேல் நகரில் உள்ள கோயில் ஒன்றில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக கூட்டம் காரணமாக அந்த கோயிலில் உள்ள பழமையான படிக்கட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு மீட்பு பணிகளை தொடங்கிய நிலையில் 12 பேர் … Read more

கோவில் படிக்கட்டு இடிந்து 13 பேர் உயிரிழப்பு!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது பலேஸ்வர் மகாதேவ் கோயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இந்நிலையில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென மளமளவென சரிந்து கீழே விழுந்தன. இதையடுத்து படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் 13 பக்தர்கள் … Read more

இந்த வகை மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!!

அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த சலுகையைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய, மாநில சுகாதார சேவை இயக்குநரிடமிருந்து சான்றிதழை பொருட்களை இறக்குமதி செய்யும் நபர் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, மருந்துகளுக்கு 10% சுங்க வரியும், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஒரு சில பிரிவுகளுக்கு சலுகையாக 5% அல்லது வரி விலக்கும் … Read more

இன்று முதல் ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’ மகாராஷ்டிரா பாஜக அறிவிப்பு

மும்பை: எம்.பி. பதவி தகுதி இழப்புக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், சாவர்க்கர் விவகாரத்தில் சிவசேனாவுக்கும் (உத்தவ்), காங்கிரஸுக்கும் இடையேஏற்பட்ட மோதலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையி்ல, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’யைஇன்று முதல் தொடங்குவதாக பாஜக … Read more

'கடவுள் நெனச்சா பிழைப்பாங்க'.. ம.பி.யில் கோவில் கிணற்றுக்குள் விழுந்து 13 பேர் பலி..

மத்திய பிரதேச கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் போது கிணற்றின் படிக்கட்டு இடிந்து ஏற்பட்ட விபத்தில் கிணற்றுக்குள் விழுந்த 13 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள படேல் நகர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஆழமான கிணற்றின் மேல்கூரை உடைந்ததில் வழிபாட்டில் இருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில், பெரும்பாலானோர் பெண்கள் என்பதால் கிணற்றுக்குள் … Read more

வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்: ராகுல் காந்தி டிவீட்

டெல்லி: வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம் என வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். பாகுபாட்டுக்கு எதிராகப் போராடி, சமத்துவம், நீதியின் பாதையில் நாட்டை வழிநடத்திய அனைவருக்கும் அஞ்சலிகள் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் சரண் அடைகிறார் அம்ரித் பால் சிங்

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவர் நேபாளத்தில் … Read more

தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு இட்லி – ஸ்விகி

தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவாக இட்லி உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. உலக இட்லி தினமாக மார்ச் 30ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தங்களிடம் கடந்த ஓராண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 3 கோடியே 30 லட்சம் பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டிருந்ததாகவும் பெங்களூர், ஹைதராபாத், சென்னை நகரங்களிலிருந்து அதிக ஆர்டர் வந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே 6 லட்சம் … Read more