திருமலை திருப்பதியில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் 1008 பேர் இலவச தரிசனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி தலைமையில், ராஜஸ்தான் இளைஞர் சங்கம் மற்றும் சென்னை ஃபுட் பேங்க் ஆகியோரின் ஒத்துழைப்பில் நேற்றுமுன்தினம் சென்னையிலிருந்து 5 வயது முதல் 70 வயது வரை உள்ள மாற்று திறனாளிகள் ரயில் மூலம் இலவசமாக திருப்பதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து திருமலைக்கு அழைத்து சென்று, ஏழுமலையானை தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன பாக்கியத்தை வழங்கினர். இதில் 160 பேர்கண் பார்வையற்றவர்கள், 100 பேர் மற்ற உடல் பாகங்களில் … Read more

உடனே விண்ணப்பீங்க..!! இந்திய ரிசர்வ் வங்கியில் 291 கிரேடு பி அதிகாரி பணியிடங்கள்..!!

நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் பல கிளைகளில் கிரேடு பி அதிகாரி பதவிக்கு சிறந்த விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆர்பிஐ கிரேடு பி ஆபீசர் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) RBI கிரேடு B 2023 தேர்வுக்கான 291 காலியிடங்களை அறிவித்துள்ளது. பதவி: கிரேடு B அதிகாரிகள் காலியிடங்கள்: 291 பணியிடங்கள் சம்பளம்: ரூ. 55,200/- அடிப்படை ஊதியம் கிரேடு ‘பி’ (DR)-(பொது) -222 இடங்கள் கிரேடு ‘பி’ அதிகாரிகள் … Read more

13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவச பேருந்து வசதி – விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொழிலாளர் துறை கூட்டத்தில் இதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். … Read more

கர்நாடகா தேர்தல்: அட்ராசக்க.. பெண்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. இப்படி பண்ணா எப்படி ராகுல்.?

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால், பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடா தேர்தல் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே மீதம் உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் இதையே தான் சொல்கின்றன. வேலையில்லா திண்டாட்டம், சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு, ஹிஜாப் விவகாரம், அரசு டெண்டர்களுக்கு 40 சதவிகித கமிஷன், வளர்ச்சி … Read more

“எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே நல்லுறவு” – சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

டெல்லி: ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா – சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு … Read more

மோடி ஒரு "விஷப்பாம்பு".. பகிரங்கமாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே.. கொதித்து போன பாஜகவினர்!

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக, காங்கிரஸை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தற்போது அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “பாஜகவும், … Read more

Karnataka Election 2023: தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை?

Karnataka Election 2023:  கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தபோது ஏன்  அண்ணாமலை அமைதி காத்தார்?

“அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதே பாஜகவின் செயல்திட்டம்” – பிரதமர் மோடி

இந்தியாவை வறுமையில் இருந்து விடுவித்து, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதை செயல்திட்டமாக கொண்டு பாஜக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில பாஜக தொண்டர்களிடையே காணொலிக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர், இதர கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதை செயல் திட்டமாக கொண்டுள்ளதாகவும், பாஜக இளைஞர்களின் திறனை முறைப்படுத்தி பயன்படுத்த செயல்திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஊழலை ஒழிப்பதற்கு விருப்பம் காட்டாமல் இருந்ததாகவும், அக்கட்சியே ஊழலின் ஆதாரமாக திகழ்ந்ததாகவும் அவர் … Read more

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”..!!

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு எரித்தால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பல் ஆகிவிடும்.இதை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அடுப்புகளை தயாரிக்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். சூலா அடுப்புகளை தயாரிக்கும் பணி சுடுமண் சிற்பக் … Read more

கர்நாடகாவில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மைசூருவில் உள்ள உணவகத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். கர்நாடகாவில் வருகிற மே 10‍-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் மைசூருவில் பிரபலமான … Read more