பிஹாரில் ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடத்தை அமைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன: அமித் ஷா

சசாரம்: பிஹாரில் தொழில்துறைக்கான வழித்தடம் அமைக்க விரும்பிய பிரதமர் மோடியைப் போலல்லாமல், இண்டியா கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடம் அமைக்க முயற்சிக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். பிஹார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலின் இறுதி நாள் பிரச்சாரத்துக்காக சசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் மீது வீசப்படும் மோர்டார் குண்டுகள் இந்த மாநிலத்தில் உள்ள ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். சமீபத்தில், ராகுல் மற்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ‘வாக்காளர் … Read more

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை? – மோகன் பகவத் விளக்கம்

மும்பை: பதிவு இல்லாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், அவர் இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். பிரியங்க் கார்கேவின் கருத்துகளுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் … Read more

மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்! கண்ணாமூச்சு ஆடலாம் என அழைத்து சதி..

Women Sets Mother In Law On Fire : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மருமகள் ஒருவர் மாமியாரை எரித்துகொன்ற விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்

பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார். இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் … Read more

இந்தியாவின் பணக்கார சமையல் கலைஞர் யார் தெரியுமா? மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறாரா?

வீட்டு சமையலறைகளில் இருந்து உலக அரங்கிற்கு சென்ற சமையல் கலைஞர்கள், தங்களின் திறமையால் நிதி ரீதியாகவும், புகழ் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். 

பிஹார் மக்கள் 2-ம் கட்ட தேர்தலிலும் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: “பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்” என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு … Read more

இண்டியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா ஜேஎம்எம்? – பிஹார் முடிவுகளுக்காக காத்திருக்கும் ஹேமந்த் சோரண்!

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி உள்ளது. இக்கட்சி தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரண் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பழங்குடி … Read more

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

கோட்டயம்: உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்து வந்தனர். காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் அந்தப் … Read more

கொலை, பலாத்கார, தீவிரவாத குற்றவாளிகள் பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ ஆதா​ரங்​கள் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​வில் கடந்த 1997ம் ஆண்டு 138 ஏக்​கர் பரப்​பள​வில் மத்​திய சிறை கட்​டப்​பட்​டது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் இந்த சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக, … Read more