#BIG NEWS : நாடு முழுவதும் இன்று ஆதிவாசிகள் போராட்டம்..!!

அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதாக எடுக்கப்பட்டுள்ள சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஓரங்கட்டும் செயல் ஆகும். இது இந்திய ஜனநாயகத்துக்கும், ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்துக்கும் நேரடி அவமதிப்பாகும்’ என குற்றம் சாட்டினார். மோடி அரசு இவ்வாறு தொடர்ந்து அரசியல்சாசனத்தை மீறிவருவதை கண்டித்து 26-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் மாநிலம், மாவட்டம், … Read more

இந்தியாவில் நலிந்து வரும் சர்க்கஸ் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சர் நக்வி வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் தொழில் தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போராடுகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் எண்ணற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் கிடைப்பதால் நாட்டில் சர்க்கஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா … Read more

தமிழ் மொழி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி – பிரதமர் மோடி

உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய அவரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் ஏராளமானோர் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பப்புவா நியு கினியாவில் டாக் பிஸின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டது தமக்குக் கிடைத்த பெருமை என்றார். … Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம் – ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். கலவர சூழல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஷ்ணுபூர், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். முன்னதாக, ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலரின் … Read more

உத்தரகாண்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்… டெல்லியிலிருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக பச்சைக் கொடியை பிரதமர் அசைத்ததும் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை துவங்கியது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதுடன், மக்களின் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதாகவும் தெரிவித்தார். டேராடூன் – டெல்லி இடையிலான 314 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் … Read more

வங்கதேசத்திடம் 20 ரயில் இன்ஜின்கள் ஒப்படைப்பு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு அக்டோ பரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் 20 அகலப்பாதை (பிஜி) ரயில் இன்ஜின்களை தயாரித்து அளிப்பதாக இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 இன்ஜின்கள் வங்கதேசத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த இன்ஜின்களை பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இன்ஜிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வங்கதேச … Read more

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக – மத்திய அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அஜ்மீர் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தனது அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அங்குள்ள அஜ்மீருக்கு மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் வகையில் வரும் மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு மூன்றாவது முறையாக … Read more

“கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது” – பிரதமர் மோடி

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 3வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 4 ஆயிரத்து 570 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக … Read more

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி: சிறையில் வழுக்கி விழுந்தார்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், திகார் சிறையின் குளியலறையில் தடுமாறி விழுந்த காரணத்தால் தீனதயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவக் காரணங்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,”சுமார் 6 மணியளவில் விசாரணைக் கைதியான சத்யேந்திர ஜெயின், சிஜே -7 மருத்துவமனையின் எம்ஐ அறையின் குளியலறையில் தடுமாறி விழுந்தார். பொதுவான பலவீனம் காரணமாக அவர் … Read more

“புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப விரைவு நடவடிக்கைகள்” – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 25) காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். கடந்த … Read more