ராமநவமி ஊர்வல வன்முறை: மேற்கு வங்க ஆளுநரிடம் விவரம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா
புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் நேற்றுமாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. … Read more