“ரூ.30 கோடி சொத்து இருந்தும் உணவு அளிக்காத மகன்…” – வயதான தம்பதியரின் உருக்கமான தற்கொலைக் குறிப்பு

சண்டிகர்: 30 கோடி சொத்து வைத்துள்ள தங்கள் மகன், தங்களுக்கு உணவிடவில்லை என தற்கொலைக் கடிதத்தில் சொல்லி உயிரை மாய்த்துக் கொண்டனர் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதியர். அவர்கள் இருவரும் 70 வயதை கடந்தவர்கள். இருவரும் சுதந்திர இந்தியாவில் தங்கள் வாழ்வின் பெரும்பாலான நாட்கள் வழந்தவர்கள். பூச்சிக்களை அழிக்கவல்ல மாத்திரையை உட்கொண்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜெகதீஷ் சந்திர ஆர்யா (78) மற்றும் பாக்லி தேவி (77) என தம்பதியர் இருவரும் இந்த மாத்திரையை … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது லோக்ஆயுக்தா

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை லோக்ஆயுக்தா 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது. முதல்வர் நிவாரண நிதியை தவறாக கையாண்டதாக பினராயி விஜயனுக்கு எதிராக லோக்ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட்விஸ்பரர்ஸ்’ படக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதைவளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தியாவில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுதான் முதல் … Read more

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்..!!

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் 25,000 அபராதம் விதித்துள்ளது.

நாளை முதல் வருமான வரி விதியில் மாற்றம்!!

அண்மையில் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வருமான வரி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையில் … Read more

கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

கோவிலுக்குச் சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் … Read more

ராமநவமி ஊர்வல வன்முறை: மேற்கு வங்க ஆளுநரிடம் விவரம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் நேற்றுமாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. … Read more

பிரதமரின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத்தேவையில்லை-கெஜ்ரிவாலுக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரதமரின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ்களைக் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் மத்திய தகவல் ஆணையமும் பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்திடம் விவரங்களை கேட்டிருந்தது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் … Read more

மோடி குறித்த மற்றொரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன்: பாட்னா நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.  கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின்  கோலாரில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் (மோடி)  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவ்விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுலின் எம்பி பதவி … Read more

பயங்கரவாதத்தை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஒஹானா தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இக்குழுவை, சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் இன்று வரவேற்றார். அப்போது பேசிய ஓம் பிர்லா, ”இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு … Read more