தெலங்கானா | போலீஸாரை கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் சிறை

ஹைதராபாத்: போலீஸாரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு 14 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TSPSC தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் அம்மாநிலத்தில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, இதே விவகாரத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த … Read more

இவரை பிடித்து கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு..!!

உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் தீப்தி. இவர் பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த மோசடி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளதாரக் குற்றப்பிரிவு என பல புலனாய்வு அமைப்புகள் இந்த மோசடி பற்றி விசாரித்து வருகின்றன. ரூ.4,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.அதேநேரம் சிபிஐ விசாரணையில் 15,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் 40 வயதான … Read more

இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் எம்.பி., எம்எல்ஏ தேர்தலில் சீட் வழங்கக் கூடாது: அஜித் பவார் யோசனை

புனே: ”தேசத்தின் வளர்ச்சிக்காக எல்லோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களக அறிவிக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை எத்ரிக்கட்சித் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டது. அதில், “மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை … Read more

போலீசாரைத் தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர்.டி கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!

ஐதராபாத்தில், காவல் துறையினரை தாக்கியதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டார். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திற்கு ஷர்மிளா செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை அங்கு செல்ல விடாமல் வீட்டிலேயே தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போலீசாரை தாக்கியதாகக் கூறி ஷர்மிளா … Read more

அதிரடி! 8 வங்கிகளின் உரிமம் ரத்து!!

இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக 8 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல், ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி, பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி, லட்சுமி கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்படுவதாக … Read more

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல்: 40-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை – தேடுதல் வேட்டை தீவிரம்

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40-க்கும் மேற்பட்டோரை தடுப்புக்காவலில் கைது செய்து அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து சங்கியோடி என்ற இடத்துக்கு ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 6 ராணுவ வீரர்களை குறிவைத்து அப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 20-ம் தேதி … Read more

Operation kaveri: மக்களே நாங்க இருக்கோம்.. சூடான் வாழ் இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது. இதுவரை 420 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 3 ஆயிரத்து 700 பேர் படுகாயமடைந்துள்ளதாக சூடானின் சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் வலுப்பெற்று வருகிறது. சூடானில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெற்றிகரமாக வெளியேற்றி வருகின்றனர். … Read more

ஆபரேஷன் காவிரி… முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் காவிரி’ செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பட்டுச்சேலை மட்டுமில்ல முடி நீளமா இருந்தாலும் பிடிச்சி இழுத்துக்குவோம்..! குடுமிப்பிடி சண்டை குமுதாக்கள்..!

தள்ளுபடி விலையில் பட்டுச்சேலை வாங்க சென்ற இடத்தில் ஒரே சேலைக்கு இரு பெண்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.. தங்க நகைகள் மற்றும் பட்டுச்சேலைகள் மீது பெண்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு எதுவும் அடுத்தவர் கையில் எடுத்து வைத்திருக்கும் அழகான புடவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..! அப்படி ஒரு புடவைக்குத்தான் இந்த இரு பெண்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர் கர்நாடக பட்டு தொழிற்சாலை நிறுவனம் சார்பில் தலைநகர் பெங்களூருவின் மல்லேஸ்வரம் … Read more

புடவைக்காக முடியை பிடித்து சண்டை போட்டுக்கொண்ட பெண்கள்!!

புடவைக்காக பெண்கள் முடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு நகரில் மல்லேஷ்வரம் என்ற பகுதியில் ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம். எனவே புடவை எடுக்க பெண்கள் கடையில் குவிந்து விட்டனர். அப்போது, இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. ஒருவர் தலைமுடியை பிடித்து அடித்து மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார். அடிவாங்கிய பெண் … Read more