புனேவில் தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாபமாக பலி..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததுடன், 22 பேர் பலத்த காயமடைந்தனர். சதாராவில் இருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில்  நார்ஹே பகுதிக்கு அருகே புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பின்னால்  சர்க்கரை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த … Read more

37 நாட்கள் தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 37 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், குருத்வாராவுக்கு உரையாற்ற வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார். அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பஞ்சாபின் அமிர்தசரஸ் அடுத்த ஜல்லபூர் கெரா கிராமத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங் (30). பள்ளிப் படிப்பை முடித்த அவர், துபாயில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டில் பஞ்சாப் திரும்பிய அவர், ‘வாரிஸ் … Read more

பூஞ்ச் தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி: ரமலான் கொண்டாட்டத்தை தவிர்த்த கிராமம்

சண்டிகர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப் பாதுகாப்பு பணிக்கு சென்று வருகின்றனர்.. இந்நிலையில் ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சாங்கியோட் நோக்கி 3 நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் சென்ற … Read more

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை நாளை மறுநாள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

கேரள மாநிலம் கொச்சியில் இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகு சேவையை பிரதமர் மோடி நாளை மறுநாள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன், 747 கோடி ரூபாய் செலவில் கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை மாநிலத்தின் கனவுத் திட்டம் என வர்ணித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைக்கு உற்சாகமான காலம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள அனைத்து வசதிகளும் வாட்டர் … Read more

நாடு முழுவதும் 100 உணவு தெருக்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தூய்மையான, சுகாதாரமான 100 உணவு தெருக்களை தொடங்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய உணவுத் துறையில் தெரு உணவகங்கள் ஒரு அங்கமாக மாறிவிட்டன. இது உள்ளூர் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிப்பதுடன் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சமோசா, வட பாவ் போன்ற இந்திய தெரு உணவுகள் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தை பெற்றுள்ளன. நமது தெருவோர உணவுகள் உள்ளூர் மக்களை மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளது. ஆனால் … Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் மோசடி..!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து  34 லட்சம் ரூபாயை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிக் கொண்டு பெண் ஒருவர் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி, ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.  அவருக்கு 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து, அவர் குறித்த தகவல்களை திருமண … Read more

மகாராஷ்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும்: சஞ்சய் ராவத்

மும்பை: மகாராஷ்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சாய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் இவ்வாறு கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் … Read more

அச்சச்சோ.. ‘இந்தியா வரும் சீன ராணுவ அமைச்சர்’.. இனி என்ன நடக்க போகுதோ.!

ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள சீன பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியா வர உள்ளார். பல்லவ வம்சம் தெற்காசிய நாடுகளான சீனாவிற்கும், நமக்கும் பங்காளி சண்டை உள்ளது. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் தமிழகத்திற்கும், சீனாவிற்கும் பெரும் தொடர்பு உள்ளது. தமிழகத்தின் பல்லவ இளவரசர் போதி தர்மர், சீனாவிற்கு சென்று மருத்துவம், தற்காப்புகலைகளை கற்றுக் கொடுத்ததால், அவரை தெய்வமாக தாமு என்ற பெயரில் சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் தான் சீன அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம், … Read more

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை..!

ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணையை ஊற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ஏலூர் பகுதியைச் சேர்ந்த அனுதீப், அதேப்பகுதியைச் சேர்ந்த பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியிடம் தனியாக பேச வேண்டுமென கூறி அழைத்துச் சென்று தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியும் … Read more

அமெரிக்கா, ரஷ்யாவைப் போல அதிகார தேசமில்லை இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் 

நாக்பூர்: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளது. வேத காலத்தில் இருந்தே அது தொடர்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார். நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேத் சன்ஸ்கிரித் ஞான் கவுரவ் சமரோஹ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியாகக் கொண்டுள்ளது. வேத … Read more