பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கேரளா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவின் திருமண சட்டங்களின்படி பெண்ணின் திருமண வயது 18, ஆணின் வயது 21 ஆக உள்ளது. இந்த சூழலில் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு கடந்த 2021-ம்ஆண்டில் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. ஜெயா ஜேட்லி குழு அளித்த பரிந்துரைகளின்படி பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை … Read more

குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்

பெங்களூரு: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி கட்சியை சேர்ந்த ஏ.டி. ராமசாமி பாஜவில் இணைந்தார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரகலகூடு மஜத எம்எல்ஏ ஏடி ராமசாமி நேற்று முன்தினம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஏடி ராமசாமி பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஏடி ராமசாமிக்கு கட்சியின் கொடியை அணிவித்து வரவேற்றார். அதன் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரையும் … Read more

ஏப். 11-ல் வயநாட்டிற்கு செல்கிறார் ராகுல் காந்தி..!!

ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு அடிக்கடி வந்தார். அங்குள்ள மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தார். இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக கொண்டாடப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் … Read more

ஆபத்தான நிலையில் மேலும் 3 கிணறுகள் இந்தூரில் கண்டுபிடிப்பு

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோயில் கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது ராம நவமியின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது சிலாப் உடைந்து 60 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் 36 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தூர் கோயில்களில் உள்ள கிணறுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விபத்து நடந்த கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் இருக்கும் 3 கோயில்களில் மூடப்பட்ட நிலையில் ஆபத் தான … Read more

சிறுவர் கடத்தலை மையமாகக் கொண்ட கார் பிராங்க் வீடியோக்கள் பரவல்.. யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வைரலான வீடியோக்களை ஆர்வமாகப் பார்க்கும் சிறுவர் சிறுமியரைக் குறிவைக்கும் சமூக ஊடக கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கார் பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் காரில் சிறுவர்கள் கடத்தப்படும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. காரில் லிப்ட் கொடுப்பதாக சிறுவரை ஏற்றி பின்னர் அவர்கள் கடத்தப்பட்டதாகக்கூறுவது போல இந்த வீடியோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரில் இருந்து சிறுவன் தப்ப முயற்சிப்பதும், காரின் கதவு லாக் ஆகியிருப்பதும், மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக உள்ள இந்த … Read more

10 மாத தண்டனைக்குப்பின் சிறையிலிருந்து சித்து விடுதலை; உற்சாக வரவேற்பு

பாட்டியாலா: கொலை வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 10 மாத தண்டனைக்குப் பின் பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலையானார். பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சித்து, கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில் காரில் சென்ற போது ஏற்பட்ட தகராறில் குர்னம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் இறந்தார். இந்த கொலை வழக்கில் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பாட்டியாலா சிறையில் … Read more

காதல் தோல்வியால் மதுபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை.!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் மதுபோதையில் ரகளை செய்துள்ளார். அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. வைரலான அந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் பாடாய் படுத்துகிறார். கார் மீது ஏறுகிறார், ஒருவரின் ஸ்கூட்டரை … Read more

தாவர பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பூஞ்சை ஆராய்ச்சியாளர்..!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தொடர்ந்து பல்வேறு வகையான கொடிய தொற்று நோய்கள் தீவிரமாக பரவி அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக எபோலா, எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா, பறவை காய்ச்சல், மங்கிபாக்ஸ், கறுப்பு பூஞ்சை என பலவிதமான தொற்று பரவல் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய வகை தொற்று பாதிப்பு ஒன்று உலகிலேயே முதல் முறையாக இந்தியர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. Plant Fungus எனப்படும் தாவரப் பூஞ்சை தொற்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த … Read more

எளிதில் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை

புதுடெல்லி: கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர் கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டு தல்களில் கூறியிருப்பதாவது. முதியோர், இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு உட் பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இவர்கள் பூஸ்டர் தடுப்பூசி … Read more

நாடு முழுவதும் மீண்டும் பரவும் கொரோனா… முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ள சுகாதார அமைச்சகம்!

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில் சுகாதார அமைச்சகம் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் கோவிட் பாதிப்புக்கு இணை பாதிப்புகள் குறித்து கவனமாக செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மிதமான நோய்க்கூறு இருப்பவர்களுக்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Source link