வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி,மார்ச்30: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.55,600 கோடியில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் அதிக நிதி பெற்றுள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியதாவது:  வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன் படி, வெளிநாட்டு நிதி பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனமும் வரவு செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் … Read more

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மேலும் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் மற்றும் அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், இந்த விவகாரங்களை எழுப்பி, கருப்பு உடையில் வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது

புதுடெல்லி: நாளை மறுநாள் முதல் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும்  1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக  உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவ துறையில்  மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்  384 அத்தியாவசிய  மருந்துகள்  மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும்  அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம்  தேதி முதல் மருந்துகளின் விலை  உயர்வு நடைமுறைக்கு வரும். குறிப்பாக வலி  நிவாரணி, தொற்று எதிர்ப்பு,  … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024: மம்தா பானர்ஜியின் திடீர் மாற்றம்; பாஜகவிற்கு சம்மட்டி அடி.!

மம்தா கர்ஜனை கொல்கத்தாவின் நகர மையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக இன்று பேரணி நடத்தப்பட்டது. அப்போது அதில் பேசிய மேற்கு வங்க முதல்வர், ‘‘அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி, பாஜகவை நாட்டிலிருந்து, ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக வெற்றிகரமாகப் போராட வேண்டும். துஷ்யஷனை ஒழித்து நாட்டைக் காப்பாற்றுங்கள். துரியோதனனை அகற்றி ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 நாடாளுமன்ற … Read more

வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி:  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி, உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சு குறித்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

ஹேக்கர்கள் வசமிருந்து தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கம் மீட்பு!

சென்னை: தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். இந்நிலையில், இந்தப் பக்கம் தற்போது ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கங்களில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். குழந்தை போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாகவும் … Read more

ஆன்மிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது; உச்சநீதிமன்றம் குட்டு.!

அரசியலையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே வெறுப்பு பேச்சுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து பெரும்பான்மைவாத பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்து ராஷ்டிரத்தை அமைக்கப் பாடுபடும் வலதுசாரி தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கைகளை பின்பற்றி … Read more

நிலக்கரி வரி விதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் காங். தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில், ஒரு டன்னுக்கு ரூ. 25 வீதம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 540 கோடி வரை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், இடைத்தரகர்கள், வணிகர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான அய்ஜாஸ் தேபர், ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் துதேஜா, மதுபான தொழிலதிபர் பல்தேவ் சிங் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

கர்நாடகா தேர்தல்; பாஜகவிற்கு காத்திருக்கும் சிக்கல்.! என்ன ஆகும்.?

கர்நாடகா தேர்தலில், மக்களை வதைக்கும் பல்வேறு சிக்கல்கள் பாஜகவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பாஜகவிற்கு ஏன் முக்கியம்.? கர்நாடகாவில் பாஜகவில் மீண்டும் ஆட்சி அமைப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தென் இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். கடந்த முறை தேர்தலில் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த கர்நாடகா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் … Read more

புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை தரப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள், முக்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை தரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை தடுக்க குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் 60 எஸ்.ஐ., 26 ஓட்டுநர்கள், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என காலி பணியிடங்கள் இவ்வாண்டுக்குள் நிரப்பப்படும் எனவும் கூறினார்.