ஆன்மிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது; உச்சநீதிமன்றம் குட்டு.!

அரசியலையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே வெறுப்பு பேச்சுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து பெரும்பான்மைவாத பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்து ராஷ்டிரத்தை அமைக்கப் பாடுபடும் வலதுசாரி தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறது. அதன்காரணமாக வலதுசாரி இந்த்துத்துவ அமைப்புகளான விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்கள் தள் உள்ளிட்ட அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுக்களை வெளிப்படையாக பேசி வருகின்றன.

காஷ்மீரில் முஸ்லிம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடுரமாக கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மசூதிகளில், வீடுகளுக்குள் தொழுகை செய்யும் இஸ்லாமியர்களையும், வீடுகளுக்குள் பிரார்த்தனை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் மீதும் பல்வேறு வன்முறைகள் கடந்த 9 ஆண்டுகளாக கட்டவிழ்த்து பட்டுள்ளன்.

மாட்டுக்கறியை கொண்டு செல்வதாக கூறி பல இஸ்லாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளவாறு மதச்சார்பற்ற நாடானா இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளாக வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தந்து அதிகரித்துள்ளது. ஆனால் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது எந்த வழக்குகளும் பாயவில்லை என்பதும் இந்திய ஆன்மைவை ஆட்டிப்படைக்கும் கொடூரம்.

திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இன்னும் 12 நாட்கள் மட்டுமே!

இந்தநிலையில் அரசியலில் இருந்து மதத்தை பிரிப்பது தான் இதை தடுப்பதற்கு சிறந்த வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலும் மதங்களும் பிரிந்து, அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகளுக்கு முடிவு ஏற்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெறுப்புப் பேச்சுகளை ஒரு “தீய வட்டம்” என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த வார்த்தைகள் விளிம்புநிலை கூறுகளால் செய்யப்படுகின்றன என்றும், மக்கள் அவ்வாறு செய்வதிலிருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உரைகளைக் குறிப்பிட்டு, தொலைதூரப் பகுதிகளிலிருந்தும், மூலை முடுக்கிலிருந்தும் மக்கள் அத்தகைய தலைவர்களின் பேச்சை கேட்க கூடினர் என்று கூறினர்.

கர்நாடக தேர்தல் 2023: பாஜக தான் டாப்… ஆனா ஒரு பெரிய சிக்கல்- வெளியான சர்வே முடிவுகள்!

“அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சனை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளோம். மற்ற குடிமக்கள் அல்லது சமூகங்களை இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்திய மக்கள் ஏன் உறுதிமொழி எடுக்க முடியாது’’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.