தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி

சிகாரிபுரா: தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டாம் என்று எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண தயார் என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முதல்வர் பசவராஜ் தலைமையில் கடந்த வாரம் கூடிய பாஜக அமைச்சரவை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அவர்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் சேர்த்தது. முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இடஒதுக்கீட்டை … Read more

லஞ்சப் புகாரில் சிக்கிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது – வழக்கு குறித்த முழுவிபரம்

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்‌ஷப்பா  கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்‌ஷப்பா முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்? கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருப்பக்‌ஷப்பா. கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த நிறுவனத்திற்கு … Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு! ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு!

கர்நாடகா மாநிலம் ஷிகாரிபுராவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பஞ்சாரா சபாஜ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எடியூரப்பா வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தினர் கொடியை ஏற்றினர். பழங்குடியின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்சி பிரிவினருக்கிடையிலான உள் இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவா குழுவின் … Read more

பிஎம்-ஸ்ரீ திட்டத்துக்காக 9,000 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாரிப்பு..!

பிஎம்-ஸ்ரீ திட்டத்தின்கீழ் மாதிரி பள்ளிகளை உருவாக்க நாடு முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் பிஎம்-ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் தவிர்த்து, பிற மாநிலங்கள் இதை செயல்படுத்த ஒப்புக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட 6 அளவீடுகள் … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், ஆளும்கட்சியான பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து … Read more

எம்.பி பதவியில இருந்து மட்டுமில்ல, வீட்டையும் காலி செய்: ராகுலுக்கு உத்தரவிடும் மத்திய அரசு

ராகுல் காந்தி டெல்லியில் தான் வசித்து வரும் வீட்டை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள நம்பர் 12 துக்ளக் லேன் வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். ராகுல் காந்தி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத் மாநிலம் சூரத் … Read more

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

திருப்பதி பெருமாளுக்கே அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! நன்கொடையால் ஏற்பட்ட வில்லங்கம்

திருப்பதி கோயிலில் காணிக்கையாக வந்த 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   3 ஆண்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்ய அனுமதி மறுத்து வந்த நிலையில், தற்போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வெளிநாட்டு நன்கொடையை வங்கிக் கணக்கில் வைக்க தடை விதித்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   உலகிலேயே பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் … Read more

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு

போபால்: ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழந்தது. நமீபியாவில் இருந்து விமானம் மூலம் சிவிங்கிப்புலி கொண்டுவரப்பட்டு குணோ தேசியப் பூங்காவில் கடந்த டிச.22-ல் விடப்பட்டது.

வீடியோ வெளியிட்ட ஸ்மித்: கேகேஆர் அணி ரசிகர்களின் ரியாக்ஷனும், கேப்டன் அறிவிப்பும்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 … Read more