இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்… இவரே தான் அவர்..!

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியை, மேல்முறையீட்டுக்கான காலம் வரை பறிக்காமல் இருக்க, மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று ராகுல்காந்தி வரவிடாமல் தடுத்த நிலையில், இன்று அவர் பதவி பறிபோக அதுவே காரணமாகி இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.  மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய … Read more

இந்திய தூதரகங்கள் தாக்குதலில் சட்ட நடவடிக்கை அவசியம்: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவுக்கு ஒன்றிய அரசு திடீர் கெடுபிடி

புதுடெல்லி:   இங்கிலாந்து தலைநகர் லண்டன், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால்சிங்குக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. லண்டன் தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரியின் பாதுகாப்பை ஒன்றிய அரசு குறைத்தது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி நேற்று கூறுகையில்,‘‘ இந்திய தூதரகங்கள் மீது … Read more

சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்..!!

2016 மே 1-ம் தேதி நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது.இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், … Read more

இப்படி கூட நடக்குமா ? ஒரே நேரத்தில் இளம்பெண், அம்மா, பாட்டி, மாமியார் கர்ப்பம்..!!

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் நடக்கும் தருணங்களை நினைவுகளாகவும், சிலர் புகைப்படங்கள் மூலமாகவும் பாதுகாக்க விரும்புகின்றனர். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் போட்டோ ஷூட் செய்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள், கர்ப்பம் மற்றும் புதிய குழந்தையின் வருகை என புதிய ட்ரெண்டுகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அதன் அடிப்படையிலான ஒரு கர்ப்ப புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. அதில், 3 தலைமுறை பெண்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர். கர்ப்பமாக உள்ள பெண்ணின் அம்மா, … Read more

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை? – ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் … Read more

நிதி மசோதாவில் புதிய நிவாரணம் ரூ.7,27,700 வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி இல்லை

புதுடெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையில் வழங்கப்பட்டுள்ள சிறிய நிவாரணத்தின்படி, ஆண்டு வருமானமாக ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரை சம்பாதிப்போர் வரி செலுத்த தேவையில்லை என வரி நிபுணர்கள் கூறி உள்ளனர். கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, ரூ.7 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் … Read more

வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்!?

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் வெள்ளியன்று முடிந்தது. இதையடுத்து … Read more

நேரடி காட்சிகள்!! வீட்டின் மொட்டை மாடியில் விமானம் மோதல்.. இருவர் படுகாயம்..!!

ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியதில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், உரிய விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தின் காட்சிகள், வீட்டின் கான்கிரீட் தூணால் அந்த விமானம் … Read more

சிபிஐ, அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 5-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 14 எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒடுக்குவதையும், அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதையும் இலக்காக வைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமை அமைப்புகளை … Read more

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெங்களூர் வருகை!

ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கர்நாடகாவுக்கு செல்லும் பிரதமர் மோடி கடந்த மூன்று மாதங்களில் ஏழாவது முறையாக இன்று மீண்டும் கர்நாடகா செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு! கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பாஜக. காங்கிரஸ், … Read more