ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிகள் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘3இ’ என குறிப்பிடப்பட்ட இந்த எகானமி வகுப்பில் ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இதற்கிடையே, இந்த எகானமி … Read more

அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி; கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியதாவது: நாடு முழுவதும் கடைசியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் 2022ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்தது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை  109.5 டாலராக இருந்தது. ஆனால் 2023 மார்ச் 20ம் தேதி கச்சா எண்ணெய் விலை … Read more

லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடி? டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன் போடப்பட்ட தடுப்புகள் அகற்றம்

புதுடெல்லி: டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் நேற்று திடீரென அகற்றப்பட்டன. இது லண்டனில் இந்திய தூதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தியாவில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பினர் மற்றும் அதன் தலைவர் அம்ரித் பால் சிங் மீது பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசுக்கு … Read more

உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது

புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி, நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம், உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்த அமைப்பினர் ஈடுபட்டதாக எழுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக … Read more

தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்றும் முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர், பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காவின் உறைவிடமாக இருக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும். இதன் … Read more

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகினர். இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி … Read more

இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். டெல்லி ராஷ்டிர பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு பத்ம விபூஷணும், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவிற்கு பத்ம பூஷண் விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார். இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல், மாசிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், பரதநாட்டியக் … Read more

காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

”புரியாத இந்தி மொழியில் ஏன் வாசிக்கிறீர்கள்?” மேகாலய ஆளுநரின் உரைக்கு எம்.எல்.ஏ எதிர்ப்பு!

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, அம்மாநில ஆளுநர் இந்தியில் உரையாற்றியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், … Read more

கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது … Read more