பென்ஸ் டு மாருதி டு பைக்; மார்டன் உடை – பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தப்பித்தது எப்படி?

பஞ்சாப்: காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு நாட்களாக பஞ்சாப் முழுவதும் அம்மாநில காவல்துறை தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடிவரும் நிலையில், தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய சனிக்கிழமை காலை 11.27 மணியளவில் ஜலந்தரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மாருதி காரில் தப்பித்துச் செல்லும் … Read more

3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான கவிதா தனது செல்போன்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவிடம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 11ம் தேதி 9 மணி நேரமும் நேற்று முன்தினம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் மூன்றாவது முறையாக கவிதா நேற்றும் விசாரணைக்கு டெல்லி … Read more

பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் அம்ரித்பால் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பை சேர்ந்த அம்ரித்பால்சிங் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக தேடியும் அவரை கைது செய்ய முடியவில்லை. இதற்காக பஞ்சாப் முழுவதும் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. அம்ரித்பாலின் நிதி தொடர்பான விஷயங்களை கவனித்து கொள்ளும் தல்ஜீத் சிங் கால்சி என்பவர் அரியானாவின் குர்கான் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் கைது … Read more

தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய ஆளும் அரசு கடந்த 11 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இதில் தோஷகானா பரிசு பொருள் வழக்கு மற்றும் பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குகளில் இம்ரான் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகததால் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  இதில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பிடிஐ … Read more

ராகுலுக்கு எதிராக மோடி-மம்தா ஒப்பந்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்சி கூட்டத்தில் பேசும்போது,, ‘‘ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கி, அவரை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கின்றனர்’’ என்று பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ரகசிய … Read more

புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 699 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகி விட்டனர். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 699 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,599ஆக அதிகரித்துள்ளது.  கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தனர்.   தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவீதம், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.91 சதவீதம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. வீடுகளில் விரிசல்.. வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் பணி முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பிய நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேவந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நில அதிர்வு அடங்கி எந்த பாதிப்புகளும் இல்லை என தெரிந்தபிறகே வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் … Read more

டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் நில அதிர்வுகள்

டெல்லி: டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் மட்டுமல்ல தஜிகிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய நிலஅதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் நகர் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக பாகிஸ்தானின் … Read more

டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குழப்பம் ஏற்படுத்த பிஎஃப்ஐ சதி: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் டெல்லி நிர்வாகிகள் மீதான வழக்கில் டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற பிஎஃப்ஐ இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு வியூகங்களை வகுத்து, சதித் திட்டங்களையும் தீட்டியது. நாடு முழுவதும் வாழும் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிஎஃப்ஐ … Read more