மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்: அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சில உயர்நீதிமன்றங்கள் மட்டுமே ஆர்டிஐ இணையதளங்களை உருவாக்கி உள்ளது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை பிரவாசி லீகல் செல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. மனுவின்படி, ஆர்டிஐ விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதிகள் இல்லாததால், … Read more

சிக்கிய ஆயுதங்களில் ’AKF’ முத்திரை.. தனி ராணுவத்தை உருவாக்க நினைத்தாரா அம்ரித்பால் சிங்?

பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவரான அம்ரித்பால் சிங், தப்பியோடிய நிலையில் அவர்மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு … Read more

அதிகரிக்கும் கொரோனா… சுகாதாரத்துறையின் முக்கிய அலர்ட்!!

கொரோனா பரவலை தடுக்க திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போன்றே நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ளது. அதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்படாதவரை, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து இடைவெளியுடன் இருக்க வேண்டும். வீட்டுக்குள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது, … Read more

சூப்பர்! ரேஷனில் உணவு தானியம் வழங்கும் ஏடிஎம் எந்திரம்!!

பணம் எடுக்கும் ஏடிஎம் எந்திரம் போல், உணவு தானியங்கள் வழங்கும் ஏடிஎம் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள் வாங்கும் வழக்கத்தை மாற்றும் முயற்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கவே இத்தகைய நடவடிக்கை. ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த எந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 ரேஷன் தானிய ஏடிஎம் எந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. லக்னோவில் உள்ள … Read more

கர்நாடக தேர்தல் 2023: காங்கிரஸின் ஜாக்பாட் திட்டம்… ராகுல் காந்தி கையில் எடுத்த அஸ்திரம்!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், சமூக ரீதியில் வாக்குகளை கவருதல், வாக்குறுதிகள், மக்களின் நிலைப்பாடு, கர்நாடக தேர்தல் 2023 விரிவான சர்வே உள்ளிட்டவற்றிற்கு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வியூக நிபுணர்களை ஒப்பந்தம் போட்டு பணியில் அமர்த்தியுள்ளன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி … Read more

மின்சாரம், ரயில்கள், வேட்டை போன்றவற்றால் 3 ஆண்டுகளில் 274 யானைகள் பலி: மனித – விலங்கு மோதலால் 1,579 நபர்கள் மரணம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியான நிலையில், யானைகளால்  1,579 மனிதர்கள் கொல்லப்பட்டதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், மனித – வனவிலங்கு மோதல்களால் யானைகளின் உயிர் இழப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. மின்சாரம், விஷம் வைத்தல் போன்றவற்றால் ஏராளமான யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த 2019-20 … Read more

பஞ்சாபில் நண்பகல் வரை இணைய தள சேவைகள் முடக்கம்

ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் தேடி வரும் நிலையில், பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர். பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் … Read more

ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி

நாக்பூர்,: படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஓடிடி தளங்களில் ஆபாச வார்த்தைகள் அதிகரித்துவரும் நிலையில், படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓடிடி தளங்களில் முறைகேடான, ஆபாசமான உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக எழுந்த புகார்கள், அரசாங்கம் கவனத்தில் உள்ளதாக தெரிவித்தார். இந்த தளங்கள் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டதே … Read more

டெல்லி: ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

ஃபேஸ்புக்கில் அறிமுகமான நபர்மீது காதல்கொண்டு அவரை திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். மார்ச் 16ஆம் தேதி டெல்லியின் இஃப்க்கோ சோவ்க் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் குருகிராமிலுள்ள தனது 24 வயது காதலனை சந்திக்கச் சென்றிருக்கிறார். தன்னை பதிவு திருமணம் செய்துகொள்வதாக காதலன் அழைத்திருந்த நிலையில் மதியமே வந்த காதலி கிட்டத்தட்ட 5 மணிநேரம் காத்திருந்திருக்கிறார். ஆனால் அங்குவந்த காதலனும், அவருடைய நண்பனும் அந்த பெண்ணை பாலியல் … Read more

பஞ்சாப் நிலவரம் | பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தீவிரம் – இதுவரை 114 பேர் கைது

புதுடெல்லி: பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தப்பியோடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரத்தில், அவரது கார் ஓட்டுநர், அவரது மாமா உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது … Read more