’சிபிஎம் எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது’- கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பின்னணி காரணம்?

மதம் மாறியதால் கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விதித்துள்ளது. கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் சிபிஎம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வழக்கறிஞர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தனித் தொகுதியான தேவிகுளத்தில், தமிழரான … Read more

மது கொடுத்து ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை!!

மது கொடுத்து ராஜதானி ரயிலில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த பிரதீஷ்குமார் என்பவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா திரும்பிக்கொண்டிருந்தார். அதே ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்துள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் பேசிக்கொண்டு வந்துள்ளனர். ரயில் எர்ணாகுளத்துக்கும் ஆலப்புழாவுக்கும் இடையில் சென்றுகொண்டிருந்தபோது … Read more

பாட்னா ரயில் நிலைய டிவியில் 3 நிமிடம் ஒளிபரப்பான ஆபாச வீடியோ: பயணிகள் அதிர்ச்சி

பாட்னா: பிஹார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா நகர ரயில் நிலைய சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளில்ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருந்த நேரத்தில் சுமார் 3 நிமிடங்களுக்கு இந்த வீடியோ ஒளிபரப்பானதாக தகவல். இந்திய நாட்டின் மிகவும் பிஸியான ரயில் நிலையங்களில் பாட்னா ரயில் நிலையமும் ஒன்று. ஏனெனில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த மக்கள் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு வந்து செல்ல இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவது வழக்கம். … Read more

ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் தகவல்

டெல்லி: மார்ச் 31, 2023 நிலவரப்படி, ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57.3% என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஏடிஎம் இயந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்புவது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. கடந்தகால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏடிஎம்களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு … Read more

ரயில் நிலையத்தில் ஆபாச படம்… பதறிப் போன பயணிகள்! அடுத்து நடந்தது என்ன?

Porn Videos In Patna Railway Station: ரயில் நிலையங்களில் இருக்கும் டிவி திரைகளில் பொதுவாக ரயில் வரும் அறிவிப்பு மற்றும் சில நேரங்களில் விளம்பரங்களும் ஒளிபரப்பப்படும். ஆனால் ஒரு ரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.  பீகார் தலைநகர் பாட்னாவில்தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. பாட்னா ரயில் நிலையத்தில் நேற்று (மார்ச் 19) ரயில் ஏறுவதற்காக 10ஆவது பிளாட்ஃபார்மில் ரயில் பயணிகள் பலர் காத்திருந்தனர். அப்போது அங்குள்ள … Read more

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 – 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியான நிலையில், யானைகளால்  1,579 மனிதர்கள் கொல்லப்பட்டதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் ஒன்றிய, … Read more

”வழிநெடுக ஊக்கமிழக்கவே செய்திருப்பார்கள்”..புது வரலாறு படைத்த கேரள திருநங்கை பத்ம லட்சுமி!

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பத்ம லட்சுமி என்ற திருநங்கை கேரள பார் கவுன்சிலில் இன்று பதிவுசெய்துகொண்டார். LiveLaw இணையதள தகவலின்படி மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,500 பட்டதாரிகளுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார் பத்ம லட்சுமி. இவருக்கு கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “பல்வேறு தடைகளை கடந்துவந்து, இன்று இந்த இடத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள பத்ம … Read more

பரபரப்பு! பிரபல பாலிவுட் நடிகருக்கு கொலை மிரட்டல்!!

மின்னஞ்சல் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் என்றால் மான் வேட்டை வழக்கு மிக பிரபலம். 1998ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான், மானை வேட்டியாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்மீதான இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், சல்மான் கானின் அலுவலகத்துக்கு மோகித் கர்க் என்பவரின் பெயரில் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், … Read more

அதிர்ச்சி! ரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ!!

ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் டிவிக்களில் தனியார் நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். இதன் மூலம் மாதந்தோறும் ரயில்வே துறைக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். அதே போல் அரசு நலத்திட்டங்களும் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால் பீகாரில் உள்ள ரயில் நிலையத்தில் டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னா ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான … Read more

உ.பி. முதல்வராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு: ஹனுமன், ராம் லல்லா கோயில்களில் யோகி ஆதித்யநாத் வழிபாடு

அயோத்தி: உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந் ததையடுத்து, அவர் ஹனுமன் மற்றும் ராம் லல்லா கோயில்களில் நேற்று வழிபாடு செய்தார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி மாநில முதல்வராக பதவியேற்றார். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 25-ம்தேதி யோகி ஆதித்யநாத் 2-வது முறை யாக … Read more