தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி; தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

”500 ரூபாய் நோட்டுகளை விட 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கமே அதிகம்”- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் 2000ரூ நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி மக்களவையில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய மக்களும் மறக்கவே முடியாத அந்த நாள்! பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார் பிரதமர் மோடி. இந்த … Read more

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் பிடிவாதம்: தொடர்ந்து 6-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

புதுடெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிகளின் தொடர் அமளியால் இன்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக எந்த அலுவல்களும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் கடந்த வாரம் முழுவதும் முடங்கியது. இந்த நிலையில் ஒரு வார முடக்கத்திற்கு பின்னர், இன்று (திங்கள்கிழமை) நாடாளுமன்றம் காலையில் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. … Read more

தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. விமான நிலையத்திற்கான இடத்தை இறுதி செய்வது மாநில அரசின் கடமை என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் உறுப்பினர் கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு…!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மீது பாஜக மாநில பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மதன் திலாவர் தனது ஆதரவாளர்களுடன் கோட்டாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக குற்றம்சாட்டி திலாவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஹாவீர் நகர் காவல்நிலையத்தின் பிரதான வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டடனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த … Read more

2024 மக்களவைத் தேர்தலுக்கு உருவாக்கப்படும் புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ் சூசகம்

புதுடெல்லி: புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இன்றி புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ரே பரேலி தொகுதியிலும்.. காங்கிரஸ் தேசிய கட்சி. நாங்கள் மாநில கட்சிகள். மிக பழமையான கட்சியான காங்கிரஸ், தனது செயல்பாடு குறித்து … Read more

பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

டெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இன்று காலை தலைநகர் டெல்லி வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல், இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு  திட்டங்கள், உறவுகள், இந்தோ-பசிபிக் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர். பிரதமர் கிஷிதாவிடம் நமது ஜி20 தலைவர் பதவிக்கான முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறினேன். நமது G20 ஜனாதிபதி பதவியின் முக்கியமான … Read more

இந்திய ஜனநாயகத்தில் தலையிட வெளிநாடுகளை அழைக்கும் ராகுல் செயல் வெட்கக்கேடானது: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு

புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தில் தலையிட வெளிநாடுகளுக்கு ராகுல் அழைப்பு விடுத்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார். சென்னையில் பாஜக கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் ‘தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை’ தொடங்கி வைத்த பிறகு காணொலி காட்சி மூலம் ஜே.பி.நட்டா பேசியதாவது: அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் செயல் ஏற்க முடியாதது. … Read more

முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வரும் 28-ம் தேதி அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என நிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு குழு தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அணை பாதுகாப்பு தொடர்பாக 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவான தேதிகளை அளிக்குமாறு கோரியிருந்தார். கேரள எல்லையில் இருக்கும் முல்லை … Read more

2034-ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33% ஆக இருக்கும்: அமித் ஷா

காந்திநகர்: இந்திய பால் பண்ணை சங்கம் (ஐடிஏ) 49வது பால்பண்ணைத் தொழில் மாநாட்டை குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடத்தியது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில், ‘உலகுக்கு இந்தியா வின் பால்வளம்: வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது. உலகின் மிகப் பெரிய பால்உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. உலகின் மிகப் பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதி நாடாக … Read more