டென்னிஸ் விளையாடி கொண்டிருந்ததால் சந்திக்க வந்தவர்களை காக்க வைத்தார் புதுவை முதல்வர் வீட்டை ரேஷன் ஊழியர்கள் முற்றுகை: சாலை மறியல் – வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி முதல்வர் ரங்கசாமி வீட்டை ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது மாதந்தோறும் ரேஷன் அரிசிக்குப் பதில் பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு கடந்த 55 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால்  புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயில் … Read more

அதானி விவகாரத்தால் மீண்டும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அமளி காரணமாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச் 20) காலையில் மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். … Read more

கேரள நடிகைகளுடன் உல்லாசம்: கைதான கல்யான மன்னன் போலீசாரிடம்‘அக்ரிமென்ட்’ போட சொல்லி கெஞ்சல்

பண்ருட்டி: கேரள சினிமா மற்றும் சீரியல் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த கைதான கல்யாண மன்னன் அக்ரிமென்ட் போடும்படி போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வஉசி நகரை சேர்ந்தவர் சுந்தர் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் இணைந்து பண்ருட்டியில் நடத்தி வரும் பூச்சி மருந்து கடையில் கடந்த 10ம் தேதி இரவு ரூ.4.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த நேமத்தை சேர்ந்த ஷாகுல் அமீது (62) என்பவரை கேரளாவில் கைது செய்தனர். … Read more

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்!

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,970 ஆக உயர்ந்துள்ளது. 26,523 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது டெல்லியில் 209 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். … Read more

நாடு பிரிவினைக்கு பிறகு இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறிய எதிரி சொத்துகள் விற்பனைக்கான நடைமுறை தொடக்கம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கும், போரின் போது சீனாவுக்கும் சென்று அங்கேயே குடியுரிமைபெற்று செட்டில் ஆனவர்களின் இந்தியாவில் உள்ளசொத்துகள் எதிரி சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துகள் அனைத்தும் இந்தியாவுக்கான எதிரி சொத்து பாதுகாவலரிடம் (சிஇபிஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு சொந்தமாக உள்ளதாக மொத்தம்12,611 எதிரி சொத்துகள் கண்டறி யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி ஆகும். எதிரி சொத்து விற்பனைக்கான நடைமுறைகள் மாவட்ட மாஜிஸ்திரேட் … Read more

போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய காலிஸ்தான் ஆதரவாளர் தொடர்ந்து தலைமறைவு: பஞ்சாப்பில் பதற்றம் நீடிப்பு

சண்டிகர்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிய காலிஸ்தான் ஆதரவாளரான சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் பஞ்சாப்பில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங். சீக்கிய மதபோதகர் என கூறிக் கொள்ளும் இவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் தொடர்புடையவர். இவரது கூட்டாளி லவ்பிரீத் சிங் சமீபத்தில் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா பாதிப்பு: 4 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில 918 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6,350 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 46 லட்சத்து, 96 ஆயிரத்து 338 ஆக இருக்கிறது. Source link

தப்பியோடியதாக கூறப்படும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங் கைது?

தப்பியோடியதாக கூறப்படும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங், பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத்தின் சட்ட ஆலோசகர் இமான் சிங் கூறி உள்ளார். பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஷாகோட் காவல் நிலைய போலீசாரால் அம்ரித்பால் … Read more

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

புதுடெல்லி:  வலுவான காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “பாஜவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லை. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும். இந்த ஆண்டு கர்நாடகாவிலும், தொடர்ந்து தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், … Read more

பாட்னா ரயில் நிலைய டிவியில் திடீரென ஒளிப்பரப்பான ஆபாச வீடியோ – அதிர்ந்துபோன பயணிகள்!

பாட்னா ரயில்நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக 3 நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடியதால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தை உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், … Read more