யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்..!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்துள்ளோம். மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. தேர்தல் … Read more

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல் முறையாக மிகப்பெரிய வணிக வளாகம்

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எம்மார் குழுமம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இது சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் முதல் அந்நிய நேரடி முதலீடாகும். துபாய் மால், புர்ஜ் கலிஃபா ஆகியவற்றை உருவாக்கிய எம்மார் குழுமம் ரூ.500 கோடி முதலீட்டில் நகரில் வணிக வளாகம் மற்றும் பல்பயன் பாடுகளுக்கான கட்டிடங்களை கட்ட பணியை … Read more

எதிரி சொத்துகளை விற்க உள்துறை நடவடிக்கை

புதுடெல்லி:  பாகிஸ்தான்,சீனா பிரஜைகள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையை  ஒன்றிய உள்துறை துவக்கி  உள்ளது.  நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, ஒன்றிய அரசால் எதிரி சொத்து சட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தான், சீனாவில் குடியேறியவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள  எதிரி சொத்துகள் குறித்து  கணக்கெடுப்பு … Read more

ஆதார் தரவுகளை மக்களே இலவசமாக புதுப்பித்துக்கொள்ள புதிய ஏற்பாடு..!!

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது. அதன்படி, மக்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும். இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை … Read more

ரேசன் கடைகளில் நவீன தானிய ஏடிஎம்-கள் அறிமுகம்…!

நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும், சரியான அளவில் உணவு தானியங்கள் வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் ரேசன் கடைகளில் நவீன தானிய ஏடிஎம்-கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இவ்வகை ஏடிஎம்கள் உள்ளன. … Read more

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தில் குஜராத்தில் ஏப்ரலில் நடக்க உள்ள ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ இலச்சினை வெளியீடு

சென்னை: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஏப்.17முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கான இலச்சினை, மையக்கருத்து பாடலை சென்னையில் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். இலவச பயணத்துக்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். குஜராத் – தமிழகம் இடையிலான நல்லுறவை போற்றும் வகையில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ தொடக்க விழா சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் … Read more

2 நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகை

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், இரு நாட்டு தலைவர்களும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க உள்ளனர். மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான்   கோயிலில் மார்ச் 22ம் தேதி   உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு முதலில் சுப்ரபாதம் செய்து பின்னர்  காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்பிக்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக சென்று கோயிலுக்குள் செல்ல உள்ளனர். அதன்பின், ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்படும்.  அதன் … Read more

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ மீதான வழக்கில்: 19 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீதான வழக்கில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில்4 குற்றப் பத்திரிகைகளை அந்தந்தமாநிலங்களின் என்ஐஏ நீதிமன்றங்களில் தாக்கல் செய்தது. இந்த வரிசையில் டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் தொடர்பான வழக்கில் அங்குள்ள … Read more

தேசிய டேபிள் டென்னிஸ் வெண்கலம் வென்றார் ஆகாஷ்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-13 சிறுவர் பிரிவில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் ராஜவேலு, 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கத்துடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஆகாஷ்.