உலகின் சிறந்த பகுதிகளாக இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகள் தேர்வு..!

இந்தியாவின் லடாக் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளை உலகின் சிறந்த பகுதிகளாக டைம்ஸ் ஆங்கில வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 சுற்றுலாதளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வியக்க வைக்கும் உயரமான அழகிய மலைப்பகுதிகளை கொண்டுள்ள லடாக் திபெத்திய புத்த கலாசாரத்துடன் பல்வேறு அதிசயங்களையும் கொண்டுள்ளது என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒடிசாவிலுள்ள மயூர்பஞ்ச் பகுதி அதன் பசுமையான நிலப்பரப்பு, வளமான கலாச்சார மரபு மற்றும் பழங்கால கோயில்களுக்கு பெயர் … Read more

16 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலன்!!

16 வயது கர்ப்பிணி சிறுமியை அவரது காதலனே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் ரஜாவ்லி என்ற பகுதியை சேர்ந்த சோனு குமார் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 16 சிறுமிக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகவே, சோனு குமார் மூலம் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து கர்ப்பம் குறித்து சிறுமி, சோனு குமாரிடம் தெரிவித்து … Read more

ராகுல் காந்தியை சுற்றி வளைத்த போலீஸ் குழு; டெல்லியில் பதற்றம்.!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரையின் முடிவில் ஸ்ரீநகர் உரையின் போது, ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்’ என்ற அவரின் கருத்துக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்காததால், டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் குழு இன்று ராகுல் காந்தியின் வீட்டை முற்றுகையிட்டது. ராகுல் காந்தியின் உரை குறித்து அறிந்த போலீசார், மார்ச் 16 ஆம் தேதி ஒரு கேள்வித்தாளை அனுப்பி, “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தன்னை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு” … Read more

சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். உபேந்திரா ஷைனி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் பீகாரில் கைது செய்தனர்.

மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – முதலமைச்சர் பிரேன் சிங்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்நுழைவு அனுமதி முறை நடைமுறையில் இருக்கும் நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய மியான்மர் நாட்டினரை நாடு கடத்தவும், அரசு பதிவுகளில் அவர்களது பெயர் இருந்தால் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதலமைச்சர் பிரேன்சிங் … Read more

பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச்சு ராகுல் காந்தியிடம் போலீஸ் விசாரணை: லண்டன் விவகாரத்திற்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தியது. ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி காவல்துறை சார்பில் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், ‘பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைதால் பதற்றம்! இணைய சேவை முடக்கம்; என்னதான் நடக்கிறது பஞ்சாப்பில்?

பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் கிளர்ச்சியாளர் அம்ரித்பால் சிங் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. யார் இந்த வாரிஸ் பஞ்சாப் தே’ ?.. நடந்தது என்ன? பஞ்சாப் அமிர்தசரஸை சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, … Read more

பஞ்சாப் போலீசுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த ‘காலிஸ்தான்’ ஆதரவு தலைவன் தப்பியோட்டம்: 78 பேர் கைது; 144 தடை உத்தரவு; மாநிலம் முழுவதும் உஷார்

ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் போலீசார் தேடி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை … Read more

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளா: சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது; இதை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஒன்றிய அரசு வழிகாட்ட வேண்டும். சுங்கச்சாவடிகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறித்த வழக்கு விசாரணை ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இடுகாட்டில் கேக் வெட்டி pre wedding ஷூட்டிங் நடக்கிறதா? எங்கு தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!

இடுகாடு, தகனம் பற்றியெல்லாம் நினைத்தாலே பலரும் அச்சப்பட்டு அவ்விடத்தை விரைவில் கடந்துவிட வேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் குஜாரத்தில் உள்ள திசா பகுதியில் உள்ள இடுகாடு ஒன்றில் பிறந்தநாள் விழா, திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோ ஷூட் போன்ற நிகழ்வுகளையெல்லாம் நடத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது குஜாரத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள திசா என்ற பகுதியில் 12,000 சதுர அடி பரப்பளவில் 5 முதல் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது இடுகாடு ஒன்று. இதனை இடுகாடு என்று … Read more